பனிக்காலத்தில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி.?
பொதுவாக முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களை வாங்கி அப்ளை செய்கிறார்கள். இதனால் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
ஒரு 2 மணி நேரம் கழித்து முகம் பொலிவிழந்து காணப்படும். அதிலும் இந்த பனிக்காலத்தில் சொல்லவே வேணாம் ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் நன்றாக இருக்கும். அதுவே ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் தான் இந்த பதிவில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கற்றாழை மற்றும் தேன்:
முதலில் ஒரு கற்றாழையை எடுத்து கொள்ளவும், அதன் தோல் பகுதியை சீவி விட்டு உள்ளிருக்கும் ஜெல்லில் மேலே சிறிதளவு நெய்யை தடவ வேண்டும். இதனை பயன்படுத்தி முகம் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும், அதன் பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இந்த குறிப்பை நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம், ஏனென்றால் இவை குளிர்ச்சி தன்மை உடையதால் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..
உதட்டிற்கு:
பனிக்காலத்தில் உதடானது வறண்டு காணப்படும், இதனை சரி செய்வதற்கு கடையில் விற்கும் லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் வீட்டிலேயே உதட்டை ஈரப்பதமாக வைத்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் சிறிதளவு, ரோஜா இதழ் 6 சேர்த்து கொள்ளவும். ரோஜா இதழை ஒன்று இரண்டுமாக பிய்த்து போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதிலிருந்து ஒரு ரோஜா இதழை மட்டும் எடுத்து உதட்டில் அப்ளை செய்ய வேண்டும். இதை பயன்படுத்துவதால் உதடு வறண்டு போகாமல் ஈரப்பதமாக இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |