என்றென்றும் இளமையாக புது பொலிவுடனும் இருக்க தேங்காய் எண்ணெய் மட்டும் போதும் ..

Advertisement

இளமையான தோற்றத்திற்கு 

மாசு, மறு, பரு நீங்கி இயற்கையான அழகான சருமத்தை பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். இந்த விருப்பம் பாகுபாடு இல்லாமல் ஆண், பெண் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் விரும்புவது. என்னதான் விலைஉயர்ந்த கிரீம் பயன்படுத்தினாலும் முகம் பொலிவு என்பது சிறிது நேரம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இயற்கை முறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நிரந்தரமாக இயற்கையான முக பொலிவை தரும். உண்மையை சொன்னால் நம்முடைய சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு எந்த வகை கிரீம் தேவையில்லை. உணவே மருந்து இதுவே உங்களின் இயற்கையான முகப்பொலிவிற்கு வழிவகுக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இயற்கையாக சருமத்தை பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய வழிகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பளிச் என்ற முகத்திற்கு என்ன செய்ய:

Face Cream தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  3. கற்றாழை சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  4. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

நமது சருமத்திற்கு தீங்கை விளைவிப்பது மாசுகளும் வெப்பமும் தான். அதுமட்டும் இல்லாமல் சத்துக்கள் அற்ற உணவு நமது சருமத்தை மிக விரைவிலே சுருங்க செய்துவிடும். இதில் இருந்து நமது சுயமத்தை பாதுகாக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் போதும்.

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் துளையும்  ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை சாறு, மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை உங்களின் முகம் முழுவதும் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும்.

தேங்காய் எண்ணையில் உள்ள சத்துக்கள் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது வெண்மையை தரும்.

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்திகொண்டது. அதனால் முகத்தில் படியும் மாசுகளை எதிர்த்து உடனடியாக போராடும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement