இயற்கை முக அழகுக்கு
நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய சில எளிமையான அழகு குறிப்பு இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இந்த மருக்களை நீக்கிவிட முடியும். நமது முகம் பொலிவாக இருந்தால் தான் நமக்குள்ளும் ஒரு நேர்மறையான எண்ணம் தோன்றும். அதனால் நமது முகத்தை எப்போதும் பொலிவுடனும் அழகாக வைத்துக்கொள்ள நாம் போராடுவோம். அந்த வகையில் இன்று இயற்கைக்கு முறையில் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள சில இயற்கை டிப்ஸ்களை பார்க்கலாம். இவற்றை நம் வீட்டிலே மிகவும் எளிமையாக செய்யலாம். வாருங்கள் குறிப்பினை பார்க்கலாம்.
Glowing Skin Naturally in Tamil:
Tips 1:
எலுமிச்சை ஃபேஷியல்:
எலுமிச்சை மிகவும் சிறப்பான ஒரு ப்ளீச்சிங் தன்மை நிறைந்த பொருள்.
முதலில் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து, அதனைக் ஒரு பருத்தித்துணியினை கொண்டு முகம் முழுவதும் மெதுவாக ஒற்றி எடுக்கவும்.
சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு கடலைமாவு கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
பின்னர், மென்மையான துணியால் முகத்தை துடைத்து, பின் ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமமானது மென்மையாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
Tips 2:
வாழைப்பழம்:
வாழைப்பழம் முக அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதனை முகத்தில் லேசாக மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமம் வறட்சி தடுக்கப்படுவதுடன் மிருதுவான சருமம் கிடைக்கும்.
வாழைப்பழம் சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |