Glowing Skin Secrets Naturally in Tamil
இந்த அவசர காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியம் பற்றியும் அழகு பற்றியும் அக்கறை கொள்வதில்லை. இதனால் நாளடைவில் நம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி நம் அழகும்சீர்குலைந்து விடுகிறது. இவற்றில் பெரும்பாலும் முகத்தில் தான் அதிக சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதாவது, பல்வேறு காரணங்களால் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் வடிதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க நாமும் பல வழிகளை பின்பற்றி வருகின்றோம். இயற்கையாகவே முகத்தை இளமையாகவும் பளிச்சென்றும் வைத்துக்கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றில் ஒன்றினை பற்றி தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Glowing Skin Naturally in Tamil:
தக்காளி பேஸ் பேக்:
முதலில், ஒரு பாதியளவு தக்காளியை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து அதில் உள்ள சாற்றை மட்டும் நன்றாக பிழிந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
இந்த தக்காளி சாற்றுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
முதலில், முகத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள்.
அதன் பிறகு, தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தின் எல்லா பகுதியிலும் சம அளவில் அப்ளை செய்து 15 நிமிடம் வரை அப்படியே வைத்துவிட்டு அதன் பிறகு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இவ்வாறு நிங்கள் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
உங்களின் அழகை கெடுக்கும் முகப்பருக்கள் நீங்கி சருமம் பொழிவு பெற…
மஞ்சள் பேஸ் பேக்:
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன், 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் எடுத்து கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றி எடுத்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
முதலில், முகத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள்.
அதன் பிறகு, இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதை உங்களால் உணர் முடியும்.
மழைக்காலத்தில் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்று தெரியுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |