Godhumai Maavu Face Pack in Tamil
நம்முடைய முகத்தை என்ன தான் வித விதமான பவுடர், கிரீம் என அப்ளை செய்து பராமரித்து வந்தாலும் கூட 1 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றால் போதும் அத்துணை அழகும் அப்படியே வீணாகி விடும். ஏனென்றால் வெளியில் செல்வதனால் சூரியனின் வெளிச்சம், காற்று மாசுபாடு மற்றும் தூசியினால் நமது முகத்தில் படியும் அழுக்குகள் என இவை அனைத்தினாலும் நமது முகம் கருத்து போய்விடுகிறது. அந்த வகையில் இத்தகைய பிரச்சனை எல்லாருக்கு வரக்கூடிய ஒன்றாகவும், ஆண்கள் மற்றும் பெண்கள் என இவருக்கும் வரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. சரி இப்படிப்பட்ட பிரச்சனையை எப்படி தான் சரி செய்வது என்ற குழப்பமானது அனைவருக்கும் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் முகத்தில் இருக்கும் கருமை என அனைத்தும் நீங்கி முகம் பளிச்சென்று மாற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கோதுமை மாவு முகத்திற்கு:
கோதுமை மாவு நமது முகத்தில் இருக்கும் அழுக்குகள், கருமை என இவற்றை எல்லாம் நீக்கி முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு சிறந்த ஒரு பலனை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு- 2 ஸ்பூன்
- உருளைக்கிழங்கு- 1
- பால்- 1 ஸ்பூன்
- பாதாம் எண்ணெய்- 1/2 ஸ்பூன்

முதலில் 1 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் தோலை நீக்கி விடுங்கள். அதன் பிறகு உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.
இப்போது ஒரு மிக்சி ஜாரில் நறுக்கி வைத்துள்ள உருளையை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள். அடுத்து ஒரு பவுலில் 2 ஸ்பூன் கோதுமை மாவு, அரைத்த உருளைக்கிழங்கு பேஸ்ட், 1 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து விடுங்கள்.
5 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1/2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது முகத்தை பளிச்செஎன்று மாற்றக்கூடிய Face Pack தயார்.
பயன்படுத்தும் முறை:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face Pack- ஐ முகத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். பின்பு சாதாரணமான தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.
இவ்வாறு வாரம் 2 முறை செய்தால் போதும் முகம் கூடிய விரைவில் பளிச்சென்று மாறிவிடும்.
இந்த தீபாவளிக்கு உங்க முகம் நிலவு போல் மின்ன கடலை மாவு மட்டும் போதும்..
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














