Grampu for Hair Growth in Tamil
இன்றைய கால கட்டத்தில் முடி வளர்ச்சிக்கு ஏராளமான பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் நமது வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். இதற்காக நாம் தனியாக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வகையில் கிராம்புவை பயன்படுத்தி சிரப் தயார் செய்து அதனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். முடி வளர்ச்சியை அதிகரிக்க கிராம்பு மிகவும் பயனளிக்கிறது, குறிப்பாக தலை முடியின் வேர் பகுதிக்கு நல்ல வலிமையினை கொடுக்கிறது இதனால் தலைமுடி நல்ல போஷாக்குடன் நன்கு அடர்த்தியாகவும் நிலமாகவும் வளர் உதவும். சரி வாங்க இந்த சிரப் எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- கிராம்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
- தண்ணீரை – ஒரு கிளாஸ்
- ஸ்ப்ரே பாட்டில் – ஓன்று
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடி கருமையாக பிரியாணி இலை மட்டும் போதும்..!
தயார் செய்யும் முறை – Grampu for Hair Growth in Tamil:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கிராம்பு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.
நன்கு கொத்தி வைத்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்களை வரை கொதிக்க வைக்கவும், அதாவது தண்ணீரின் நிறை நமக்கு மாறிவரும், அதாவது கிராம்பில் உள்ள சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கிய பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆறவைக்கவும்.
நன்கு ஆறியதும் வடிக்கட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக ஸ்ப்ரே செய்யுங்கள், ஸ்ப்ரே செய்த பிறகு ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்கு ஷாம்பு போட்டு அலசிவிடலாம், இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை என்று ஒரு மாதம் வரை செய்து வர தலைமுடி நன்கு போஷாக்குடன், அடர்த்தியாக, நிலமாக மற்றும் கருமையாக வளரும்.
இந்த டிப்ஸை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பின்பற்றலாம் கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும் ஆக ஒரு முறை ட்ரை செய்து பெறுங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
6 பொருள் போதும் நரைமுடியை 2 மணிநேரத்தில் கருமையாக்கும்..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |