நரை முடி அனைத்தையும் கருப்பாக மாற்ற செம்பருத்தி இலை 1 கைப்பிடி இருந்தால் போதும்..!

Advertisement

Grey Hair Home Remedies in Tamil 

பொதுவாக நரை முடி ஆனது நீண்ட நாட்கள் வாழ்ந்து முடித்த பிறகு வரும் என்பது நம் முன்னோர்கள் காலத்து நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் அந்த பழக்க வழக்கம் என்பது சுத்தமாக கிடையாது. ஏனென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் வந்து கொண்டு இருக்கிறது. இத்தகைய நரை முடி பிரச்சனை ஆனது வயதானவர்களுக்கு வந்தால் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது. அதுவே வயதில் சிறியவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தால் அதுவே அவர்களுக்கு ஒரு கவலையாக மாறி விடும். அதனால் இன்றைய பதிவில் இதுபோன்ற கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க, அதாவது நரை முடி கருப்பாக இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி கருப்பாக வேண்டுமா..?

செம்பருத்தி அனைவருடைய வீட்டிலும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட  இருந்தாலும் கூட அதனை யாரும் பெரிதாக பயன்படுத்துவது இல்லை. ஆனால் செம்பருத்தி இலையும் சரி, அத்தகைய இலையில் இருந்து கிடைக்கக்கூடிய சாற்றிலும் சரி நமது முடியினை வேகு விரைவில் கருப்பாக மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி இலை- 2 கைப்பிடி அளவு
  • செம்பருத்தி பூ- 5
  • டீத்தூள்- 2 ஸ்பூன்
  • காபி தூள்- 1 ஸ்பூன்
  • மருதாணி பவுடர்- 2 ஸ்பூன்
  • கரிசலாங்கண்ணி பவுடர்- 2 ஸ்பூன்
  • அவுரி பொடி- 2 ஸ்பூன்

முதலில் 2 கைப்பிடி அளவு செம்பருத்தி இலையினை எடுத்து நன்றாக தண்ணீரில் 10 நிமிடம்  ஊற வைத்து விடுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து 2 ஸ்பூன் டீத்தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

நரை முடி கருப்பாக வேண்டுமா

கடாயில் உள்ள டீத்தூள் சாறு 1/2 டம்ளர் அளவிற்கு வந்தவுடன் 5 செம்பருத்தி பூ சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். 2 நிமிடம் கழித்து நன்றாக ஆற வைத்து பின்பு அதனை வடிகட்டி கொள்ளுங்கள்.

கடைசியாக செம்பருத்தி இலை மற்றும் 1 ஸ்பூன் காபி தூளினையும் மிக்சி ஜாரில் சேர்த்து டீத்தூள் தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

நரை முடி கருப்பாக இயற்கை டை

அதன் பின்பு அடுப்பில் ஒரு இரும்பு கடாயினை வைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை மற்றும் மீதம் இருக்கும் டீத்தூள் தண்ணீரை சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். 2 நிமிடம் கழித்து 2 ஸ்பூன் வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர் மற்றும் மருதாணி பவுடரையும் சேர்த்து கலந்து கொண்டே கொதிக்க விட்டு கெட்டியாக வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடுங்கள்.

இதனை தொடர்ந்து 2 ஸ்பூன் அவுரி பொடியினை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இயற்கையான முறையில் ஹேர் டை தயார்.

பயன்படுத்தம் முறை:

தயார் செய்து வைத்துள்ள ஹேர் டையினை நன்றாக உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடுங்கள்.

இவ்வாறு மாதம் 1 முறை செய்தால் போதும் நரை முடி அனைத்தும் விரைவில் கருப்பாக மாறி விடும்.

வித்தியாசமான முறையில் பழங்களின் தோலை பயன்படுத்தி செய்த ஹேர் டை.. 100% ரிசல்ட் தரக்கூடியது 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement