நரை முடி கருப்பாக மாற
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடலில் பிரச்சனைகள் இருக்கும். அதாவது முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், முடி உதிர்வு, நரைமுடி இதுபோன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதிலும் நாம் அதிகம் கவலைப்படும் நரை முடி தான். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் நரைமுடி வரும். ஆனால் இப்போது அப்படியில்லை. சிறியவர்கள் முதல் இளைஞர்கள் என்று அனைவருக்கும் சிறுவயதிலேயே நரைமுடி வருகிறது. இதற்கு காரணம் நாம் கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை பயன்படுத்துவதாலும், சத்தான உணவு பொருட்கள் சாப்பிடாததும் தான். உடனே இதை சரி செய்வதற்கு மீண்டும் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இதனால் முடிக்கு மேலும் பாதிப்புகள் தன வரும். அதனால் தான் இந்த பதிவில் நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நரை முடி கருப்பாக மாற்ற கருஞ்சீரகம் போதும்..!
முதலில் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கருஞ்சீரகத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வறுத்து கொள்ளுங்கள். பின் அந்த கருஞ்சீரகத்தை மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சட்டுனு நரைமுடி கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
பின் கடைசியாக பேஸ்ட் செய்ய தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ளவும்.
அவ்வளவு தான் நரை முடியை கருப்பாக மற்றும் பேக் ரெடி.
அப்ளை செய்யும் முறை:
இந்த பேக்கை இரவு தூங்க செல்லும் முன் உங்கள் தலையில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் எழுந்ததும் தலையை அலசி கொள்ளவும்.
இதுபோல 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் நரை முடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்.
ஒல்லியாக உள்ள தலைமுடி அசுரவேகத்தில் வளர கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |