நரை முடி கருப்பாக பாட்டி வைத்தியம்
இன்றைய பதிவில் நரைமுடி கருப்பாக நமது பாட்டி சொன்ன வைத்தியம் என்ன என்று தான் பார்க்கப்போகிறோம். அந்த வகையில் பார்த்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் நரைமுடி பிரச்சனை இருக்கிறது. இதுநாள் வரையிலும் நீங்கள் நரை முடியை கருப்பாக மாற்ற வேண்டும் என என்னென்னவோ ட்ரை செய்து இருப்பீர்கள். ஒருவேளை அத்தகைய முயற்சியில் உங்களுக்கு ஏதேனும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள். மேலும் இந்த ரெமிடியை ட்ரை செய்வதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து அத்தகைய ரெமிடியை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Grey Hair to Black Hair Home Remedies:
நரைமுடியினை கருப்பாக மாற்ற முதலில் நாம் டை போன்ற ஒன்றை தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- சின்ன வெங்காயத்தோள்- 1 கைப்பிடி அளவு
- டீ தூள்- 2 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 2 ஸ்பூன்
வெள்ளை முடி கருப்பாக மாற:
முதலில் சின்ன வெங்காயதோளினை 1 கைப்பிடி அளவிற்கு எடுத்து சுத்தம் செய்து அலசி வைத்து விடுங்கள் அதன் பிறகு 1 1/2 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் டீ தூள் நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின்பு டீ தூள் நன்றாக கொதித்து 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் வந்தவுடன் வடிக்கட்டி வைத்து விடுங்கள்.
இப்போது ஒரு கடாயினை அடுப்பில் வைத்து அதில் 1 கைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தூள் மற்றும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியினை சேர்த்து விடுங்கள்.
அடுத்து கடாயில் உள்ள கொதிக்க வைத்துள்ள டீ தூள் தண்ணீரையும் அதனுடன் சேர்த்து 1/2 டம்ளர் அளவிற்கு கொதிக்கும் வரை கொதிக்க விடுங்கள். பின்பு 1/2 டம்ளர் வந்த பிறகு தயார் ஆகியுள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள்.
கடைசியாக வடி கட்டிய தண்ணீரை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள தண்ணீரை தலையில் நரை முடி இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் கழித்து தலை குளித்து விடுங்கள்.
இத்தகைய முறையினை வாரம் 2 முறை மட்டும் அப்ளை செய்து வந்தால் போதும் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.
மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம் அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |