இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்க முதுமையில் கூட நரைமுடி வராது..!

Advertisement

Grey Hair to Black Hair Permanently in Tamil

நாம் அனைவருக்குமே நம்மை மற்றவர்களிடம் அழகாக காட்டிக்கொள்வது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உள்ள ஒரு மிக பெரிய பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். பெரியவர்களுக்கு இது வயது முதிவின் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் சிறிய குழந்தை முதல் டீனேஜில் உள்ளவர்களுக்கு கூட இந்த நரைமுடி ஏற்படுவதற்கான காரணங்கள் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் தான் நரைமுடி ஏற்படுகிறது. அதனால் அதனை போக்க நாமும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு பயனளிக்காமல் போய்விடும். எனவே தான் இன்று நரைமுடியை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் தலையில் உள்ள நரைமுடிகளை போக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Change Grey hair to Black Hair in Tamil:

How to Change Grey hair to Black Hair in Tamil

வாழ்நாள் முழுவதும் நரைமுடி வராமல் இருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை முதலில் அறிந்து கொள்வோம்.

  1. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி 
  2. வெந்தயக்கீரை – 1 கைப்பிடி அளவு 
  3. கருவேப்பிலை – – 1 கைப்பிடி அளவு 
  4. மருதாணி பொடி – 2 டேபிள் ஸ்பூன் 
  5. காபி தூள் – 1 டேபிள் ஸ்பூன் 

5 நாட்களில் கழுத்தில் உள்ள கருமை மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

படி – 1

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 500 மி.லி தேங்காய் எண்ணெய்யை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

படி – 2

நாம் ஊற்றிய தேங்காய் எண்ணெய் நன்கு சூடானவுடன் அதில் 1 கைப்பிடி அளவு வெந்தயக்கீரை, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 2 டேபிள் ஸ்பூன் மருதாணி பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காபி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

10 நாட்களுக்கு இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு தலைமுடி வேகமாக வளரும்

படி – 3

அவை அனைத்தும் நன்கு கொதித்த பிறகு அதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். பிறகு இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயில் இருந்து 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் எடுத்து உங்களின் தலையில் தடவி நன்கு மசாஜி செய்து இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.

மறுநாள் காலையில் உங்களுக்கு விருப்பமான சிகைக்காய் அல்லது ஷாம்போவை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் தலையில் உள்ள நரைமுடிகள் வேரிலிருந்து கருமையாக மாறுவதை நீங்களே காணலாம்.

முகத்தில் உள்ள பள்ளங்களை 7 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் போக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement