நிரந்தமாக முடி உதிர்வு இல்லாமல் இருக்க இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..!

Advertisement

Hair Fall Control Oil at Home 

அனைவருக்கும் தலையில் முடி உதிர்வு என்பது இருக்கும். இத்தகைய முடி உதிர்வு ஆனது சிறிதளவு இருந்தால் அது வழக்கமான ஒன்று என நினைத்து அப்படியே விட்டு விடலாம். இதற்கு மாறாக சிலருக்கு தலையில் சீப்பு வைத்தாலோ அல்லது தலை குளிக்கும் போதோ பார்த்தால் கையிலடங்காத அளவிற்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். இத்தகைய பிரச்சனையை நாம் சாதாரணமான நினைத்து ஆரம்பத்திலேயே இதற்கான முயற்சி எடுக்காமல் விட்டு விட்டோம் என்றால் பின்பு நம்முடைய தலையில் ஒரு முடி கூட இல்லாமல் வழுக்கை விழும் நிலைமை ஏற்பட்டு விடும். அதனால் இன்று தலையில் ஏற்படும் முடி உதிர்வினை நிறுத்துவதற்கான எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடி உதிர்தல் நிற்க:

செம்பருத்தி பூ தலைக்கு

  1. செம்பருத்தி இலை- 2
  2. செம்பருத்தி இலை- 1 கப் 
  3. பாதாம் எண்ணெய்- 1/4 கப் 
  4. தேங்காய் எண்ணெய்- 1/4 கப் 

முடி உதிர்தலை நிறுத்தவும், முடி நன்றாக வளரவும் எண்ணெய் தயாரிப்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்.. 

செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

செம்பருத்தி என்றாலே அதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதாவது செம்பருத்தியில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், கார்போஹைட்ரேட், புரதசத்து மற்றும் கொழுப்புசத்து என பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி

அதனால் முதலில் செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூவினை எடுத்துக்கொண்டு சுத்தமாக தண்ணீரில் அலசி பின்பு இதனை நன்றாக வெயிலில் 1 நாட்கள் காய வைத்து கொள்ள வேண்டும்.

1 நாட்கள் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அடுப்பில் உள்ள எண்ணெய் நன்றாக கொதித்த பிறகு அதனுடன் காய்ந்த செம்பருத்தி இலை மற்றும் பூக்களை சேர்த்து மீண்டும் ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் நன்றாக கொதித்த பிறகு அதனை ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது உங்களின் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி மீண்டும் முடியினை வளர வைக்கக்கூடிய செம்பருத்தி எண்ணெய் தயார்.

தலைக்கு எண்ணெய் பயன்படுத்தல்:

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை நீங்கள் எப்போது எல்லாம் பயன்படுத்த போகிறீர்களா அப்போது சிறிது நேரம் சூடு செய்து பின்பு ஆற வைத்து தான் பயன்படுத்த வேண்டும்.

ஆகவே எண்ணெயினை தலையில் நன்றாக முடியின் உச்சி முதல் அடி வரை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வழக்கமான ஷாம்பு பயன்படுத்தி தலை குளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும் தலையில் முடி உதிர்தல் இல்லாமல் இருக்கும்.

பயங்கரமா முடி கொட்டுகிறதா.. கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணுங்க.. 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement