ஒரு முடி கூட கொட்டாது
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய நிலையில் நம்மில் பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு தான். இந்த முடி உதிர்வு பிரச்சனை நம் அனைவருக்குமே இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்கும் நிலையில் நாமும் முடி உதிர்வு பிரச்சனை சரி செய்வதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்களை வாங்கி தடவுவோம்.
இதனால் மேலும் அதிகமாக முடி உதிர ஆரம்பிக்கும். எனவே இனி கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், வீட்டிலேயே எண்ணெய் தயாரித்து அதை பயன்படுத்துங்கள். சரி வாங்க நண்பர்களே முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் செய்முறை:
- தேங்காய் எண்ணெய் – 250 ml
- நெல்லிக்காய் – 4
- வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
- செம்பருத்தி பூ – 4
- செம்பருத்தி இலை – 4
- கருவேப்பிலை – 4
நாம் இன்று முடி உதிர்வை தடுப்பதற்காக எடுத்து கொள்ளும் பொருட்கள் அனைத்துமே இயற்கையான மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த பொருட்கள் தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் இந்த எண்ணெயை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..
அதற்கு முதலில் ஒரு மிக்சி ஜாரில் நெல்லைக்காய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் 250 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கருவேயில்லை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் நன்றாக கொதித்து நிறம் மாறி வந்ததும், அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம்
பின் ஒரு துணியில் வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் தயார்.
எப்படி பயன்படுத்துவது:
இந்த எண்ணெய்யை எப்பொழுதும் தடவுவது போல முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல ஒரு வாரம் தடவி வந்தால் முடி உதிர்வு முற்றிலும் நின்றுவிடும். மேலும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வெறும் 30 நாட்கள் மட்டுமே போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |