10 நாட்களில் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காண என்ன செய்யனும் தெரியுமா..?

Advertisement

முடி உதிர்வு நீங்க

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய காலத்தில் நாம் அனைவருக்கும் உடல் சூடு, அதிகப்படியான மனக் கவலை மற்றும் பொடுகு பிரச்சனை என இதுமாதிரி பல வகையான பிரச்சனைகளால் முடி உதிர்வு என்பது அதிகமாகி கொண்டே போகிறது. சரி இந்த முடி உதிர்வை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் கூட முழுமையான பலன் என்பது கிடைப்பது இல்லை. இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து இன்று முடி உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண்பதற்கான 2 குறிப்புகளை தான் பார்க்கப்போகிறோம். எனவே பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Fall Control Oil at Home:

 1. ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
 2. கிராம்பு – 6
 3. வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு
 4. தண்ணீர் – 2 டம்ளர்

மேலே கூறியுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

முடி உதிர்வு தீர்வு:

முதலில் 1 கைப்பிடி அளவு வெங்காய தோலினை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடனே சுத்தம் செய்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மற்றும் 6 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

முடி உதிர்வு தீர்வு

பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை உங்களின் தலைமுடி வேர்களில் படுமாறு ஸ்ப்ரே செய்து 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 10 நாட்களிலே உங்களின் தலைமுடி உதிர்வது கட்டுக்குள் வருவதை நீங்களே காணலாம்.

முகம் சிவப்பழகு பெற இதை மட்டும் 10 நிமிடம் செய்தால் போதும்.. 

முடி உதிர்வதை தடுக்க எண்ணெய்: 

 • செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
 • கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
 • தேங்காய் எண்ணெய் – 500 மில்லி
 • வெந்தயம் – 2 டீஸ்பூன்
 • சின்ன வெங்காயம் – 5
 • கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
 • செம்பருத்தி பூ – 2
 • பாதாம் – 10

முடி உதிர்வை தடுத்த நிறுத்த எண்ணெய் தயாரிப்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

Hair Fall Control Oil Home Remedy:

இப்போது நீங்கள் ஒரு மிக்கி ஜாரினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்துவைத்துள்ள வெந்தயம், கருஞ்சீரகம், பாதாம், செம்பருத்தி பூ, சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலை என அனைத்தினையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைக்கவும்.

முடி உதிர்வதை தடுக்க எண்ணெய்

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனுடனே நாம் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

அடுத்து இந்த எண்ணெயினை ஆற வைத்து ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பின்னர் அதனை தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 10 நாட்களிலே உங்களின் தலைமுடி உதிர்வது கட்டுக்குள் வருவதை நீங்களே காணலாம்.

Life Style👇👇எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement