Hair Fall Stop and Hair Growth Home Remedies in Tamil
முடி வளர என்ன செய்யலாம், தலையில் இருக்கும் பொடுகினை எப்படி போக செய்யலாம் என்று சிந்திக்காமல் இருக்கும் நபர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் இந்த இரண்டு பிரச்சனைகளே அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இத்தகைய நிலை அதிகமாக இருப்பதனால் முடி வளர்ச்சி ஆனது மிகவும் பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. ஆகையால் இத்தகைய நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இத்தகைய ஷாம்பின் மூலம் நல்ல பலனை எதிர்பார்ப்பது என்பது கடினம். எனவே இன்று பொடுகு தொல்லை நீங்கி முடி வேகமாக வளர செய்ய வேண்டிய வீட்டு வைத்தியத்தை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பொடுகு நீங்கி முடி வளர:
வெந்தயத்தினை நம்முடைய வீடுகளில் சமையலுக்காக பயன்படுத்தி அதிகமாக பார்த்து இருப்போம். அதேபோல் இதில் உடல் சூட்டினை குறைப்பதற்காக ஆரோக்யத்திற்காகவும் பயன்படுத்தி பார்த்து இருப்போம்.
இத்தனை வகையான பயன்பாட்டினை கொண்ட வெந்தயத்தை நமது முடிக்கு எப்படி பயன்படுத்துவது என்று தான் இன்று பார்க்கப்போகிறோம்.
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
இப்போது 2 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலையில் எழுந்து மிக்சி ஜாரில் வெந்தயத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து பவுலில் வைத்து விடுங்கள்.
அடுத்து அந்த பேஸ்டுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய முடிக்கு தேவையான வெந்தய ஹேர் பேக் தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியின் வேர் கால்களில் நன்றாக படியுமாறு அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.
20 நிமிடம் கழித்து தலைக்கு ஷாம்பு கொண்டு அலசினால் போதும் விரைவில் தலையில் உள்ள பொடுகு நீங்கி முடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
ஒரு நாளில் பருக்கள் மறையை வேப்பிலையுடன் இந்த ஒரு பொருள் போதும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |