Hair Fall Stop and Regrowth
முடியை பொறுத்தவரை அனைவருக்கும் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரின் தலை மற்றும் உடல் நிலைமையினை பொறுத்து தான் முடி வளரும் என்று நம் வீட்டில் கூறுவார்கள். அதிலும் ஒரு சிலருக்கு முடி உதிர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகும். இவ்வாறு முடி உதிர்வை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம் என்றால் தலையில் வழுக்கை விழும் நிலைமையும் ஏற்பட்டு விடும். அதனால் இன்றைய பதிவில் முடி உதிர்வு நின்று முடியை எப்படி அதிகப்படுத்துவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உதிர்ந்த முடி மீண்டும் வளர:
- முருங்கைக்கீரை- 1 கைப்பிடி அளவு
- கற்றாழை- சிறிய துண்டு
கற்றாழையில் நமது முடிக்கு தேவையான சத்துக்கள் இருப்பதனால் இதனுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து அப்ளை செய்வதனால் முடி உதிர்வு நின்று மீண்டும் முடி வளரும்.
முடி வளர ஹேர் பேக்:
முதலில் 1 கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை ஒரு பவுலில் ஊறவைத்து அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு கற்றாழையில் இருக்கும் ஜெல்லையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து வடி கட்டி கொள்ளவும். இப்போது ஹேர் பேக் தயார்.
ஹேர் பேக் அப்ளை செய்யும் முறை:
தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலையில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். நீங்கள் அப்ளை செய்யும் ஹேர் பேக் முடியின் வேர் கால்களில் படுமாறு இருக்க வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலையை அலசி விடுங்கள்.
இந்த முறையினை வாரம் 1 முறை செய்தால் போதும் முடி உதிர்வு நின்று மீண்டும் முடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |