Hair Growth Home Made Remedies
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் முடி உதிர்ந்து கொண்டே போகிறது. இதனை நினைத்து பெரும்பாலானோர் கவலைப்படுவார்கள். முக்கியமாக மனக்கவலையை முடி உதிர்வை ஏற்படுத்தும். அதனால் மன அழுத்தம், கவலை அடையாமல் இருக்க வேண்டும். இந்த பதிவில் முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
முடி உதிர்வை நிறுத்த என்ன செய்ய வேண்டும்:
வெங்காயம் மற்றும் கருவேப்பிலை:

வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி விட்டு அதை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்த இரண்டு பொருட்களையும் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலை முடிமுழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
| இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க |
வெந்தயம் மற்றும் செம்பருத்தி இலை:

வெந்தயத்தை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் நாள் காலையில் ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். இந்த வெந்தய நீரானது ஆறியதும் மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் 3 செம்பருத்தி பூக்களையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து கொண்டே வந்தால் முடி உதிர்வு நின்று முடி அடர்த்தியாக வளர்வதற்கு உதவுகிறது.
கற்றாழை ஜெல்:

ஒரு பவுலில் கற்றாழை ஜெல் 3 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்கில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலே முடி உதிர்வு நின்று முடி அடர்த்தியாக வளர உதவி செய்கிறது.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














