தலைமுடி கிடுகிடுவென நீளமாக வளர என்ன செய்யலாம் தெரியுமா..?

Advertisement

Mudi Neelamaga Valara

பொதுவாக நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்வில் பசியினை பூர்த்தி செய்யவும், ஆரோக்கியமான வாழ்வினையும் வாழ சாப்பிட்டு வருகிறோம். இதில் நம்முடைய பசியானது பூர்த்தி அடைந்தவுடன் போதும் என்ற வார்த்தையினை கூறிவிடுகிறோம். ஆனால் நம்மிடம் எவ்வளவு இருந்தாலும் இதே போதும் என்ற வார்த்தையினை மட்டும் சொல்வதே இல்லை. இதற்கு முதல் உதாரணம் என்றால் அது தலைமுடி தான். நமக்கு முடி நீளமாக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்தமுடியே எனக்கு போதும் என்று யாரும் கூறுவது இல்லை. இது தான் உணர முடிந்த ஒரு உண்மை. ஏனென்றால் அனைவருக்கும் முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருப்பதானால் நிறைய பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய வகையில் இன்று முடி நீளமாக வளர இயற்கையான முறையில் என்ன செய்வது என்பது பற்றி பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர தேங்காய் எண்ணெய்:

  • தேங்காய் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடி வளர

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு எண்ணெய்களும் முடியின் வேர் கால்கள் வரை தூண்டுதலை அதிகப்படுத்தி முடியின் வளர்ச்சியினை அதிகரிக்கிறது.

அதனால் 100 மில்லி தேங்காய் எண்ணெயில் 25 மில்லில் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த எண்ணெயினை தினமும் தடவி வரலாம். அப்படி இல்லை என்றால் வாரம் 1 முறை தலையில் தடவி தலைக் குளித்து வருவதன் மூலம் முடி நீளமாக வளர ஆரம்பித்து விடும்.

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் விளக்கெண்ணெய் குளிர்ச்சி என்பதால் இதனை தவிர்த்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்து தலையில் தடவுங்க.. அப்புறம் எல்லாரும் கேட்பாங்க என்னா எண்ணெய் தடவுற அப்படின்னு..

கற்றாழை முடி வளர:

கற்றாழை முடி வளர

நம்முடைய வீடுகளில் வளர்த்து வரும் கற்றாழையில் சத்துக்கள் என்பது எண்ணிலடங்காத அளவில் இருக்கிறது. ஆனால் நாம் யாரும் இந்த கற்றாழையினை பெரிதாக முடிக்கு பயன்படுத்துவது இல்லை.

கற்றாழை ஜெல்லினை நம்முடைய முடிக்கு தினமும் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளித்து வருவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முடியின் வேர் கால்களில் பட்டு முடியினை வேகமாக வளர செய்கிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை இப்படி கூட குணப்படுத்த முடியுமா 

நெல்லிக்காய் முடி வளர:

நெல்லிக்காய் முடி வளர

நெல்லிக்காயில் நாம் அனைவரும் ஜூஸ் செய்து குடித்து இருப்போம். அதுமட்டும் இல்லாமல் இந்த சாற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

ஆகையால் வாரம் 1 முறை நெல்லைகாய் சாற்றினை தலையில் நன்றாக மசாஜ் செய்து ஒரு 10 நிமிடம் கழித்து குளித்து வருவதன் மூலம் முடி கருமையாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement