30 நாளுக்கு தினமும் 1 உருண்டை சாப்பிட்டால் போதும் உங்கள் முடி வளர்வதை தடுக்க முடியாது..!

Advertisement

Hair Growth Laddu Recipe in Tamil

நாம் தினமும் ஒவ்வொரு நாளும் சிப்பு போட்டு சீவும் போதும் அனைவருக்கும் ஒரு வருத்தம் இருக்கும். அது என்னவென்றால் தலை முடி உதிர்ந்துகொண்டு போகிறது. இதற்கு என்ன தான் தீர்வு என்று ஒரு வருத்தமாக இருக்கும். இதனை சரி செய்ய நிறைய எண்ணெய் ஹேர் பேக் என நிறைய செய்தி பார்த்திருப்போம். அதேபோல் தான் இந்த பதிவும் என்ன அப்போதும் தலைமுடிக்கு உணவு போடுவோம். இந்த தடவை வயிற்றுக்கும் உடலுக்கும் சேர்த்து உணவு போடப்போகிறோம். சொல்லறது ஒன்னும் புரியவில்லையா இந்த பதிவில் முடி வளர்வதற்கு லட்டு செய்ய போகிறோம். அது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Laddu Recipe in Tamil:

இந்த லட்டு முடிக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் வலிமை தரக்கூடிய லட்டு தான்.  அப்படிபட்ட லட்டு செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம். இந்த லட்டில் கால்சியம், புரதம், அயன் சத்து இருக்கும். நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கும்.

ராகி மாவு – 300 கிராம்

  ஏலக்காய் – 4

  பாசி பயிறு – 200 கிராம்

  வேர்க்கடலை – 300 கிராம்

  மண்ட வெல்லம் – 300 கிராம்

தலை முடி தரையில் கிடைக்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க

செய்முறை:

ஸ்டேப் – 1

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வேர்கடலையை போட்டு வறுக்கவும். அது கருமையாக மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டேப் – 2

அதே கடாயில் பாசிபயிறு சேர்த்து அதேபோல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் அதையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கலாம்.

ஸ்டேப் – 3

அடுத்து அதேபோல் கடாயில் 3 ஸ்பூன் அளவு நெய் விட்டு அது உருகிய பின்பு நாம் எடுத்து வைத்துள்ள ராகி மாவு சேர்த்து அதையும் நன்கு வறுக்கவும். அப்படி செய்யும் போது அந்த ராகிமாவின் நிறம் மாறிவிடும். அதை அப்படியே வைக்கலாம்.

ஸ்டேப் – 4

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள பாசி பயிரை சேர்த்து பவுடர் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின் மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை சேர்த்து அரைத்து எடுத்துவரவும். இந்த இரண்டு கடலையும் நைசாக அரைக்க கூடாது.

ஸ்டேப் – 5

அடுத்து வெல்லத்தை எடுத்து அதனை நாம் எந்த அளவிற்கு வெல்லம்  எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அந்த பாகு தேங்காய் எண்ணெய் போல் மாறி வரும். அப்போது 4 ஏலக்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

ஸ்டேப் – 6

பிறகு ஒரு பாத்திரத்தில் அனைத்து மாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அதே மாவில் 15 பேரிச்சை பழத்தில் இருக்கும் விதையை எடுத்துவிட்டு வெறும் பழத்தை சேர்த்து சரியாக கலந்துகொள்ளவும்.

இது அனைத்தையும் உருண்டையாக மாற்றுவதற்கு பாகு காய்த்து வைத்துள்ள வெல்லத்தை வடிகட்டி அதில் சேர்த்துக் கொள்ளவும். அது மிதமான சூட்டில் இருக்கவேண்டும். அதனை அப்படியே சேர்த்து நன்கு கலந்து உருண்டையாக பிடித்தால் 30 உருண்டை வரும்.

எப்போது சாப்பிடவேண்டும்:

இதனை காலையில் பல் தேய்த்த பின்பு 1 டம்ளர் அளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின்பு இந்த உருண்டையை சாப்பிடலாம். அதன் பின்பு காலை உணவு சாப்பிட்ட பின்பு 12 மணி போல் சாப்பிடலாம்.

வெறும் 30 நாட்களில் கொட்டிய முடியை திரும்ப வளர வைக்கும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement