இந்த எண்ணெயை தடவுனா இப்படியா முடி வளரும் இத்தனை நாள் சொல்லாம விட்டுட்டியே பாட்டி 

Advertisement

முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியம் 

பொதுவாக முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதற்காக பல முறைகளில் முயற்சிப்போம். குறைவான நபர்கள் மட்டும் தான் இயற்கையான முறையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பலரும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடி வளர்ச்சி ஏற்படும், ஆனால் நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை நிறுத்தி விட்டால் முடி உதிர்வு ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த பாட்டி சொன்ன வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • வேப்பிலை-சிறிதளவு
  • கருவேப்பிலை- சிறிதளவு
  • துளசி- சிறிதளவு
  • வெந்தயம்- 1 தேக்கரண்டி
  • மல்லி பூ- சிறிதளவு
  • பிராமி இலைகள்- சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய்-1 1/2 கப்

எண்ணெய் செய்முறை:

முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியம் 

முதலில் மிக்சி ஜாரை எடுத்து அதில் வேப்பிலை சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ 3, துளசி சிறிதளவு, வெந்தயம் 1/4 கப், மல்லி பூ செடி இலைகள், பிராமி இலைகள் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஒரு கப் சேர்த்து கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்த பேஸ்ட்டையும் சேர்த்து 8 முதல் 10 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். அதன் பிறகு 1/4 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதித்து வைத்த எண்ணெய் ஆறியதும், வடிகட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

அப்ளை செய்யும் முறை:

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தினமும் தடவி வந்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

பெண்களே முகத்தில் இருக்கும் முடி நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement