தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தலையில் தடவி பாருங்க..

Advertisement

முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

பெண்களுக்கு முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். மேலும் வேறு பெண்களுக்கு முடி அதிகமாக இருந்தால் அதனை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் என்ன எண்ணெய் தான் தடவுகிறார்கள் என்ற கேள்வியும் இருக்கும். சில பேர் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களிடமே சென்று என்ன எண்ணெய் தடவுகிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்கள் அதிர்ஜ்க்கு பதிலளிக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்க முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை சேர்த்து லேசாக வறுத்து தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும். பின் அதே கடாயில் கருஞ்சீரகத்தை போட்டு அதே போல வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் 150 ml ஆமணக்கு எண்ணெயையும் ஊற்ற வேண்டும். பின் எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயத்தை போட்டு கொள்ள வேண்டும். வெந்தயம் போட்டதும் எண்ணெய் பொங்கி வரும். அதனால் அடுப்பை குறைத்து வைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

பின் அதில் சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி போட்டு கலந்து விட வேண்டும். எண்ணெய் பொங்கி வருவது குறைந்ததும் அதில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை போட வேண்டும். பின் எண்ணெய் கொதிப்பது நின்றவுடன் நாம் சேர்த்த பொருட்களின் நிறம் மற்றும் எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இரக்க வேண்டும். பிறகு அதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல தடவி வந்தாலே முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement