அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Advertisement

முடி வளர தேங்காய் எண்ணெய் காய்ச்சுவது எப்படி

ஆண்களை விட பெண்களுக்கு தான் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பெண்கள் தங்களின் முடி வளர்ச்சிக்காக கெமிக்கல் நிறைந்த ஹேர் ஆயில், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடி வளர்ச்சி காணப்படும். நாளடைவில் முடி உதிர்வு அல்லது ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து அதனை பயன்படுத்தி முடி வளர செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. நெல்லிக்காய் – 100 கிராம்
  2. கீழாநெல்லி இலை – 100 கிராம்
  3. கறிவேப்பிலை – 100 கிராம்
  4. செம்பருத்தி பூ – 100 கிராம்
  5. வெந்தயம் – 25 கிராம்
  6. கரிசலாங்கண்ணி இலை – 50 கிராம்
  7. தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்

எண்ணெய் செய்முறை:

முடி வளர தேங்காய் எண்ணெய் காய்ச்சுவது எப்படி

மேலே கூறியுள்ள பொருட்களை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து காய வைத்துள்ள மூலிகைகள் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்க விடவும்.

மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத் தொடங்கிய பிறகு, அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். இந்த எண்ணெயானது அப்படியே மூன்று நாட்களுக்கு இருக்கட்டும்.

மூன்று நாட்கள் கழித்து எண்ணெயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை: 

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல தடவி வரவும். இல்லையென்றால் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த எண்ணெயை தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

இது போல் நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் தலை முடி வளர்ச்சி அடைவதை நீங்களே காண்பீர்கள்.

முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா.!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement