முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
பெண்கள் முடி நிறைய இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக பலரும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடி வளர்ந்திருக்கும், ஆனால் நாளடைவில் முடியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய்-1/4 லிட்டர்
- ஆமணக்கு எண்ணெய்- 150 மில்லி லிட்டர்
- கருஞ்சீரக விதை- 2 தேக்கரண்டி
- வெந்தயம் – 1தேக்கரண்டி
- கருவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய் செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் வெந்தயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெந்தயமானது சிவந்த நிறம் வந்ததும் தனியாக எடுத்துகொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் கருஞ்சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். கருஞ்சீரகம் வதங்கியதும் தனியாக எடுத்து கொள்ளவும்.
பிறகு மிக்சி ஜாரை எடுத்து அதில் வதக்கி வைத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து அரைக்க வேண்டும்.
அடுத்து கடாயில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் 150 மில்லி லிட்டர் சேர்த்து கொள்ளவும்.
பின்பு அதனுடனே கருவேப்பிலை, சின்ன வெங்காயம், அரைத்து வைத்த வெந்தய பவுடர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இவை கொதிக்கும் பொழுது நுரை பொங்கி வரும் அப்போது அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
சேர்த்த பொருட்கள் எல்லாம் எண்ணெயில் இறங்கி நிறம் மாறும் நிலை மற்றும் எண்ணெயின் அளவு குறைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
3 பொருளை வைத்து 3 மடங்கு வரை முடியை அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க..!
பயன்படுத்தும் முறை:
நாம் செய்து வைத்துள்ள எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி கொள்ளவும். இதனை 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு தலையை நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தேய்த்து கொண்டு தலையை அலசி கொள்ளலாம்.
இது போல நீங்கள் வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |