Hair Growth Pack Home Remedy
தலைமுடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காக பல ரெமிடியையும் ட்ரை செய்கின்றனர். அதுவும் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது முடி வளர்ச்சி காணப்பட்டாலும், நாளடைவில் முடி உதிர்வு ஏற்படும். எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க இயற்கையான முறை தான் சிறந்தது. அதனால் தான் இந்த பதிவில் பாட்டி சொன்ன முறையில் முடி வளர்ச்சி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி உதிர்வு நின்று முடி வளர பாட்டி வைத்தியம்:
வெந்தய பேக்:
வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
பெண்களே முகத்தில் இருக்கும் முடி நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்:
ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
வெங்காய ஹேர் பேக்:
வெங்காயம் தலை முடி வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது. வெங்காயத்தை அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
செம்பருத்தி பேக்:
செம்பருத்தி இலைகளை கழுவி விட்டு பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்குகளில் ஏதவாது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே முடி உதிர்வு நின்று முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
இந்த எண்ணெயை தடவுனா இப்படியா முடி வளரும் இத்தனை நாள் சொல்லாம விட்டுட்டியே பாட்டி
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |