முடி வளர செய்ய வேண்டியவை
தங்களின் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவு முறையினால் முடி உதிர்வு அதிகமாகி கொண்டே போகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் எண்ணெய்கள் மற்றும் ஷாம்புகள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடி வளர்ச்சி காணப்படும். ஆனால் நாளடைவில் முடி உதிர்வு ஏற்படும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்மென்றால் இயற்கையான முறையே சிறந்தது. அதனால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை எப்படி அதிகப்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இயற்கையாக முடி வளர செய்வது எப்படி.?
வெந்தயம்:
வெந்தயத்தில் அயர்ன் மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்வு ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது.
இதற்கு முதலில் உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு, கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலைக்கு எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை கொண்டு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்க்கு பயன்படுத்தி வந்தாலே தலை முடியின் வளர்ச்சியை நீங்களே காண்பீர்கள்.
அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க
நெல்லிக்காய்:
நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. ஏனென்றால் இதில் வைட்டமின் சி இருப்பதால் முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் புரோட்டின் நிறைந்திருப்பதால் முடியை ஆரோக்கியமாக வளருவதற்கு உதவுகிறது.
இதற்கு முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 3 தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடர் சேர்த்து கொள்ளவும். அதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தளி தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்க்கு பயன்படுத்தி வந்தாலே தலை முடியின் வளர்ச்சியை நீங்களே காண்பீர்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |