மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க..!

Advertisement

Hair Growth Uses of Neem Leaves in Tamil

ஒரு மனிதருக்கு ஆசை என்பது பொருட்களை பொறுத்தோ அல்லது அதனுடைய விலையினை பொறுத்தோ வருவது இல்லை. இதற்கு ஒரு உதாரணமாக நாம் நம்முடைய தலைமுடியினை தான் கூற வேண்டும். ஏனென்றால் என்ன தான் நமக்கு போதுமான அளவு முடி இருந்தாலும் கூட இது எனக்கு பற்றாது இன்னும் வளர வேண்டும் என்ற ஆசை குறிப்பாக பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் முடி வளர அதுவும் வேகமாக வளர வைக்க என்ன செய்வது என்ற குழப்பம் அனைவரிடத்திலும் இருக்கும். ஒரு சிலர் இத்தகைய சந்தேகங்களை வெளிப்படையாக கேட்டு தெரிந்துகொள்வார்கள். மற்ற சிலர் எதையும் தெரிந்துக்கொள்ளலாம் அப்படியே விட்டு விடுவார்கள். இனி நீங்கள் இதுபோன்ற குழப்பங்கள் அடைய வேண்டாம். அதனால் இன்று முடி நீளமாக வளர வீட்டிலேயே இயற்கையான முறையில் என்ன செய்வது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

முடி வேகமாக வளர:

வேப்பிலையில் வைட்டமின் C, கால்சியம், புரதம், பாஸ்பரஸ் மற்றும் கார்போஹைட்ரேட் என பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளது. இவை நமது உடலுக்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் ஊட்டச்சத்தினை அளித்து முடியை வேகமாக வளர செய்கிறது.

  • வேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  • தண்ணீர்- 3 டம்ளர்

chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க….

வேப்பிலை முடி வளர:

வேப்பிலை முடி வளர

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு 1 கைப்பிடி வேப்பிலையை அலசி கொண்டு அந்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு 10 நிமிடம் கழித்து இந்த தண்ணீரை ஆற வைத்து பின்பு வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது முடி வளர வைக்க ஹோம் ரெமிடி தயார்.

பயன்படுத்தும் முறை:

 முடி வேகமாக வளர

நீங்கள் வழக்கமாக தலை குளிப்பது போல் குளித்து விடுங்கள். அதன் பிறகு கடைசியாக கொதிக்க வைத்து ஆறவைத்துள்ள தண்ணீரை கொண்டு தலை முடியினை அலசி விடுங்கள்.

இத்தகைய முறையினை வாரம் 2 முறை செய்து வந்தால் போதும் தலையில் பொடுகு தொல்லை இருந்தால் நீங்கி முடி மிக வேகமாக விரைவில் வளர ஆரம்பிக்கும்.

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம் அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement