Hair Lice Removal Home Remedies
பொதுவாக நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான முடியின் அமைப்பு இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதாவது சிலருக்கு சுருட்டை முடி,கோரை முடி , நீளமான முடி மற்றும் கட்டையான முடி என இதுபோன்ற அமைப்புகளில் தான் காணப்படும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொருவரும் அவருடைய முடியின் அமைப்பிற்கு ஏற்றமாதிரியான ஹேர் ஆயில், ஹேர் பேக் என பயன்படுத்துவார்கள். இத்தகைய முயற்சியில் முடி வளர்கிறதோ இல்லையோ, ஆனால் தலையில் இருக்கும் பேன் மற்றும் ஈறுகளின் தொல்லை என்பது சற்றும் குறைந்து இருக்காது. அப்படி உங்களுடைய தலையிலும் பேன் தொல்லை இருக்கிறது என்றால் இன்றைய பதிவு உங்களுக்கானது தான். ஏனென்றால் இன்று தலையில் காணப்படும் பேன்களை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது என்பது பற்றிய தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாட்டி வைத்தியம் பேன் தொல்லை நீங்க:
கிராம்பு எண்ணெய்:
தலையில் காணப்படும் பேன்களை கிராம்பு எண்ணெய் கொண்டு சுத்தம் செய்து விடலாம் என்று கூறப்படுகிறது.
- கிராம்பு எண்ணெய்- 15 சொட்டு
- ஆலிவ் எண்ணெய்- 1 அவுன்ஸ்
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள இரண்டு விதமான எண்ணையினையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த எண்ணையினை தலையில் நன்றாக அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடம் கழித்து தலைகுளித்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் தலையில் உள்ள பேன் தொல்லை படிப்படியாக குறையாக ஆரம்பமாகும்.
வேப்பிலை:
வேப்பிலை என்பது இரு கிருமி நாசினியாக மட்டும் இல்லாமல் முகம் மற்றும் முடிக்கும் நல்ல பலன்களை அளிக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு வேப்பிலையில் நிறைய சத்துக்கள் இருப்பது தெரிந்தும் கூட இதனை அதிகமாக பயன்படுத்துவது இல்லை. காரணம் இதனை எப்படி பயன்படுத்துவது என்று கூட தெரியாமல் இருக்கலாம்.
அதனால் வேப்பிலையை கொண்டு தலையில் காணப்படும் பேன்களை விரட்டலாம். அதற்கு முதலில் 1 கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீரில் சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க வைய்யுங்கள்.
மறுநாள் காலையில் கொதிக்க வைத்த வேப்பிலை தண்ணீரை வடிகட்டி தலையில் நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
அதன் பிறகு வடிகட்டிய வேப்பிலையை நன்றாக பேஸ்ட் போல அரைத்து குளிக்க போகும் 5 நிமிடத்திற்கு முன்பாக தலையில் அப்ளை செய்து பின்பு வழக்கமாக குளிப்பது போல குளித்து விடுங்கள்.
இத்தகைய செயல்பாட்டிற்கு பின்பாக தலையில் உள்ள பேன்கள் இல்லாமல் போய்விடும்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |