முடி உதிர்வு, வழுக்கை தலை, நரை முடி இந்த மூன்று பிரச்சனைக்கு ஒரே தீர்வு வெங்காயம்..

Advertisement

வழுக்கை தலை முடி வளர

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இருக்கின்ற பிரச்சனையில் முடி உதிர்வு பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இன்னும் சில நபர்களுக்கு முடி உதிர்வை கவனிக்காமல் வழுக்கை தலை வந்து விடுகிறது. அதன் பிறகு தான் அதற்கான தீர்வை காண வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முடி பிரச்சனை அப்போதைக்கு வேண்டுமானால் சரி ஆகலாம். ஆனால் நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் அதற்கான தீர்வை காண வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வெங்காயம் மற்றும் பூண்டை வைத்து எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

வெங்காயம்- 1

பூண்டு- 1

வைட்டமின் ஈ மாத்திரை- 1

ஆலிவ் ஆயில்- 250 மில்லி லிட்டர்

எண்ணெய் செய்முறை:

வழுக்கை தலை முடி வளர

முதலில் 1 வெங்காயத்தை எடுத்து கொள்ளவும், அதனை கழுவி விட்டு தோலோடு சிறியதாக நறுக்கி கொள்ள்வும்.

அடுத்து ஒரு பூண்டையும் எடுத்து தோல் உரித்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஆலிவ் ஆயில் 250 மில்லி லிட்டர் சேர்த்து கொள்ளவும்.

வெள்ளை முடியை மறைக்க இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..

அடுத்து ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் நிரப்பி கொள்ளவும், சேர்த்து பொருட்கள் நிறைந்த பாத்திரத்தை அதில் வைக்க வேண்டும். அதாவது HALF boil முறையில் அதை கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்து சேர்த்த பொருட்களின் சாயம் எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும். எண்ணெய் ஆறிய பிறகு வடிகட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து  ஸ்பிரே பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

அடுத்து பாதி எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும். இதனை 600 ml தண்ணீரில் சேர்க்க வேண்டும். இதனுடன் வைட்டமின் ஈ மாதிரிடை ஒன்றை சேர்த்து கொள்ளவும். இதனையும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

நாம் செய்து வைத்துள்ள வெங்காய எண்ணெயை தலை முடி முழுவதும் ஸ்பிரே செய்யவும் கொள்ளவும். இதனை 4 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

4 மணி நேரம் கழித்து வைட்டமின் ஈ மாத்திரை கலந்த ஸ்பிரேவை தலையில் ஸ்பிரே செய்து தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement