முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம்..!

Advertisement

முடி உதிர்வு நீங்க

பொதுவாக நாம் அணியும் ஆடையினை பொறுத்தவரை நமக்கு பிடித்த மாதிரியான மாடல் மற்றும் நிறங்களில் தான் அணிகிறோம். அதோடு மட்டும் இல்லாமல் நாம் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வித்தியாசமான முறையில் ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதன் படி பார்த்தால் நீங்கள் நினைத்த அனைத்தையும் செய்து கொள்ளலாம். ஆனால் ஹேர் ஸ்டைல் மட்டும் உங்களுடைய விருப்பப்படி செய்ய முடியாது.

ஏனென்றால் வித்தியாசமான முறையில் ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு முதலில் நம்முடைய தலையில் போதுமான முடி இருக்க வேண்டும். ஆனால் இதில் தான் பலருக்கும் பல பிரச்சனைகள் காணப்படுகிறது. ஏனென்றால் முடி உதிர்வு என்பது இன்றைய காலத்தில் உள்ள பெண்களுக்கு அதிகமாகி கொண்டே போகிறது. இத்தகைய முதிர்வு பிரச்சனையினை நாம் சரியாக கவனிக்கவில்லை என்றால் அது நமக்கு பெரிய அளவில் பிரச்சனையினை ஏற்படுத்தும். அதனால் இன்றைய பதிவில் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர செய்ய வேண்டும் பாட்டி வைத்தியம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர:

முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர:

வெங்காயம் சமையலுக்கு  மிகவும் முக்கியமானதாக இருப்பது போலவே நமது தலைமுடி ஆரோக்கியத்திற்கும் முக்கியமான ஒன்றாக தான் இருக்கிறது. அதாவது வெங்காயம் இழந்த முடியினை மீண்டும் பெறவும், முடி வளர்ச்சியினை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

  1. முட்டை– 1
  2. வெங்காயம்– 2
  3. தேங்காய் எண்ணெய்– 3 ஸ்பூன் 

முதலில் 2 பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதன் மேலே உள்ள தோலினை நீக்கி விட்டு பின்பு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல அரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பவுலில் 3 ஸ்பூன் அளவிற்கு வெங்காய பேஸ்ட்டில் இருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள். பின்பு அதனுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயினை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து விடுங்கள்.

5 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வரை கலந்தால் போதும் உங்களுக்கு தேவையான ஹேர் பேக் தயார்.

பயன்படுத்துவது எப்படி..?

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ளவற்றை தலையில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து சீயக்காயில் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து இதனை கொண்டு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

இத்தகைய முறையினை செய்தால் போது தலையில் இழந்த முடி மீண்டும் கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வெறும் 30 நாட்கள் மட்டுமே போதும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement