Hair Growth Natural Pack at Home
ஆண்களை விட பெண்கள் தான் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். முடி வளர்ச்சிக்காக கெமிக்கல் நிறைந்த எண்ணெய்கள். ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நீங்கள் பயன்படுத்தும் போது வேண்டுமானால் முடியின் வளர்ச்சி அதிகமாக காணப்படும். ஆனால் நாளடைவில் முடி உதிர்வு ஏற்படும்.
நாளடைவில் முடி மற்றும் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும், அதனால் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் இயற்கையான முறையை தேர்வு செய்யும் போது அதில் ரிசல்ட்டை பெறுவதற்கு நாட்கள் ஆகலாம், ஆனால் நிரந்தரமான முடிவை பெறலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் முடி வளர்ச்சிக்கான ஹேர் பேக்கை பற்றி அறிந்து கொள்வோம்.
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்:
முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கவும், முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை முடியை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 2 முட்டையை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை தலையில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு லேசான ஷாம்பை பயன்படுத்தி தேய்த்து விட்டு தலையை அலச வேண்டும். இந்த குறிப்பை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் முடி வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
கண்ணில் உள்ள கருவளையம் நீங்க கிராமத்து ரெமிடி ட்ரை பண்ணுங்க
தேங்காய் பால் மற்றும் கற்றாழைஜெல்:
தேங்காய் பாலானது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. இவற்றில் கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை தலைமுடியை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கும், முடி உதிர்வை தடுக்கவும் பயன்படுகிறது. அலோவேரா முடியை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது.
ஒரு பவுல் எடுத்து அதில் கற்றாழை ஜெல் இரண்டு தேக்கரண்டி மற்றும் தேங்காய் பால் 1/2 கப் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இதனை தலையில் அப்ளை செய்து 45 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |