இந்த ஹேர் பேக்கை வாரத்தில் இரண்டு முறை யூஸ் பண்ணா போதும் ..! ஒரே வாரத்தில் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்..!

Advertisement

Hair Pack For Hair Growth Naturally in Tamil

பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் கருப்பாகவும் வளர வேண்டும் என்று ஆசைபடுவார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்படுகின்ற அளவிற்கு முடி ஒரு சில பெண்களுக்கு மட்டுமே வளரும். பெரும்பாலானோருக்கு முடி வளர்ச்சி என்பதே இருக்காது. அப்படி முடி வளர்ச்சி இல்லாமல்  இருக்கும் பெண்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தக்கூடிய நாச்சுரல் ஹேர் பேக், ஹேர் ஆயில் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்த வர வேண்டும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் முடியை கருப்பாகவும் நீளமாகவும் வளர வைக்கக்கூடிய நாச்சுரல் ஹேர் பேக் ஒன்றினை பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Get Long Hair at Home in Tamil:

தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி பூ – 4
  • வெந்தயம் – 3 ஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் – 5
  • ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்

முதலில் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.

இப்போது, செம்பருத்தி பூவின் காம்பு பகுதியை நீக்கிவிட்டு எடுத்து கொள்ளுங்கள். அடுத்து சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பின், ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ மற்றும் ஊறவைத்துள்ள வெந்தயம் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

நன்கு அரைத்த பிறகு, இதனை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இந்நிலையில் இதனுடன் ஆலிவ் ஆயில் கலந்து கொள்ளுங்கள்.

இப்போது, முடி வளர்ச்சியை அதிகப்படுத்தக்கூடிய சூப்பரான ஹேர் பேக் தயார்.!

பயன்படுத்தும் முறை:

hair pack for thick hair in tamil

முதலில் தலைமுடியை இரண்டு பிரித்து சிக்கு இல்லாமல் சீவி எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு, முடியின் வேர்க்கால்களில் தேங்காய் எண்ணெய்யை முடியின் வேர்ப்பகுதியில் நன்கு படும்படி அப்ளை செய்து 1 மணிநேரம் வரை ஊறவையுங்கள்.

1 மணிநேரத்திற்கு பிறகு, தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து 30 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

அதன் பிறகு, நிங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு முடியை நன்கு அலசி சுத்தம் செய்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை நீங்களே பார்க்கலாம்.

முடி வளரவே மாட்டிங்கிறதுன்னு சொல்றத விட்டுட்டு போதும்டா முடி வளந்ததுன்னு சொல்ல இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement