Homemade Hair Pack for Hair Growth in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தங்களுடைய தலைமுடியை பராமரிக்க மிகவும் பிடிக்கும். இதற்காக பலவகையான விஷயங்களை மேற்கொள்வார்கள். இருந்தாலும் அவர்களுக்கு முடி வளர்ச்சி அதிகமாக இருக்காது, முடி உதிர்வு பிரச்சனை நிறைய இருக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இன்றைய பதிவில் முடி வளர்ச்சியை அதிகமாக அதிகரிக்க, முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க ஒரு அருமையான ஹேர் பேக் செய்முறையை பற்றி தான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அந்த ஹேர் பேக் செய்ய என்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி செய்ய வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி இலை – ஒரு கைப்பிடியளவு
- வாழைப்பழம் – இரண்டு
- கற்றாழை ஜெல் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதை மட்டும் தினமும் 1 நிமிஷம் முகத்தில் தடவினால் போதும்..! நீங்களே முகம் வெள்ளையானது போதும்னு சொல்வீங்க..!
Sembaruthi Ilai Hair Pack செய்முறை:
ஒரு கைப்பிடியளவு செம்பருத்தி இலையை பறித்து சுத்தமாக அலசி வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தலைமுடிக்கு ஏற்றது போல் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக கட்செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் கற்றாழை மடல் ஒன்றை எடுத்து அவற்றில் தோல் சீவி விட்டு அவற்றில் இருக்கும் ஜெல்லை மட்டும் இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு தண்ணீர் சேர்க்காமல் ஒரு பேஸ்டு பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் ஹேர் பேக் தார் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும்.
பின்பு தலைக்கு கள்ளமாவு அல்லது மையிலேடு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசவும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தாலே போதும், தலை முடி நன்கு போஷாக்குடன், ஆரோக்கியமாக வளரும், முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். மேலும் முடி நன்கு அடர்த்தியாகவும் நிலமாகவும் வளரக்கூடும். கண்டிப்பாக இந்த முறையை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
4 நாளில் 10 சென்டிமீட்டர் முடி வளர இந்த 4 பொருட்கள் போதும்..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |