Hair Pack For Thinning Hair in Tamil
முடி வளரவில்லை என்று கவலையாக ஒரு பக்கம் பேசினால் மறுபக்கம் முடி வளர்ந்தாலும், வளரும் முடி அடர்த்தியாக மாறுவது இல்லை. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பது இங்கு பலருக்கும் இருக்கும் கேள்வி தான். இதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதிவில் அருமையான ஹேர் பேக் பார்க்க போகிறோம். அதற்கு முன்பு முடியை வளரக்க ஆசை இருந்தாலும் அதனை சரியாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆகவே தலை முடியை வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் தலைக்கு குளிக்கவேண்டும்.
தலை குளித்த பின்பு உடனே தலையை பின்னுவது கூடாது. அதனை காயவைத்து அதன் பின்பு தான் தலையை பின்னவேண்டும். வாரத்தில் 1 நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். தலைக்கு எண்ணெய் வைக்காமல் அப்படியே விடக்கூடாது. எண்ணெய் வைத்தே ஆகவேண்டும். அப்போது தான் முடி வளரும். சரி இப்போது நாம் செய்யும் தவறுகளை பார்த்திருப்போம். இனிமேல் இதுபோல் தவறு செய்யாமல் இருக்கவேண்டும். இப்போது ஹேர் பேக் பற்றி பார்க்கலாம் வாங்க..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Hair Pack For Thinning Hair in Tamil:
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்: இதில் சல்பர் அதிகம் உள்ளது. இது புது முடியை வளர பெரிதும் உதவுகிறது. அதேபோல் இது முடி கொட்டுவதை தடுக்கும். இந்த ஹேர் பேக்கு 5 முதல் 6 சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வெந்தயம்: இந்த வெந்தயம் பொடுகு வராமலும் முடி கொட்டுவதை தவிர்க்கவும் பெரிதும் உதவுகிறது. ஆகவே இதனை 2 ஸ்பூன் அளவு முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

கரிசலாங்கண்ணி பொடி: இந்த கரிசலாங்கண்ணி பொடியானது முடி வளர்வதற்கும் வளரும் முடியை கருமையாக மாற்றவும் இது பெரிதும் உதவுகிறது. ஆகவே இதனை 3 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்வோம்.
அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்
செய்முறை:
இப்போது வெந்தயம் ஊறவைத்த தண்ணீரின் நிறம் மாறி இருக்கும். அதனை கைகளால் மசித்து அப்படியே விட்டு அந்த தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அடுத்து ஒரு மிக்சியை ஜாரில் சின்ன வெங்காயம், வெந்தய நீர் இரண்டையும் அரைத்து அதில் இருக்கும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் கரிசலாங்கண்ணி பொடி 3 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். அதனை அந்த வடிகட்டிய சாறு இரண்டையும் மிக்சி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி. இப்போது அப்படியே அப்ளை செய்வோம். எப்போதும் போல் முடியை இரண்டு பாதியாக பிரித்துக் கொள்ளவும். அடுத்து ஹேர் பேக் அப்ளை செய்யவும். அதன் பின்பு அப்படியே 20 நிமிடம் விட்டு குளிக்கவும்.
பயங்கரமா முடி கொட்டுகிறதா கவலையை விடுங்க இதை ட்ரை மட்டும் பண்ணுங்க
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














