பார்லர் பக்கம் போகாமல்..? உங்கள் முடியை மென்மையாக வைத்துக்கொள்ள சூப்பர் ஐடியா..!

Advertisement

Hair Smoothing Cream At Home in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த தலை முடி பிரச்சனை. தலை முடி என்பது நம்முடைய உடலில் வளரக்கூடியது. நாம் நன்றாக இருந்தால் தான் அதுவும் சரியாக இருக்கும்.  உதாரணத்திற்கு நீங்கள் அதிகமாக மன உளைச்சலில் இருக்கும் போது உங்களுக்கு தலை வலி வரும். அதுபோல் தான் இந்த தலை முடியும். நீங்கள் அதிகம் கவலையாக இருந்தாலும் தலை முடி கொட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே மனதை எப்போதும் அமைதியாக வைத்துகொள்வது நல்லது. அதேபோல் மனதை அமைதியாக வைத்துக்கொள்வது போல் எப்போதும் தலை முடியின் மீதும் கவனம் தேவை.

 இங்கு சிலருக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் வெயில் காலத்தில் அதிகமாக எண்ணெய் தடவினாலும் முடி வறட்சியாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது என்று அனைவரும் வெளியில் கூட செல்லாமல் வீட்டிற்குள் இருப்பீர்கள். ஆகவே அதற்காக வீட்டிலேயே எப்படி தலைமுடியை மென்மையாக மாற்றுவது என்று பார்க்கலாம்..! 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Smoothing Cream At Home in Tamil:

Hair Smoothing Cream At Home in Tamil

இதற்கு என்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம். முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் உருளைக்கிழங்கு. இதில் நிறைய ஸ்டார்ச் மூலக்கூறுகள் உள்ளது. இது நம்முடைய முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும். அதேபோல் மிகவும் சைனின் போல முடியை மாற்றும். ஆகவே 2 உருளைக்கிழங்கை  குட்டியாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்வோம்.

அதன் பின்பு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு அதனை ஒரு துணியால் வடிகட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

Hair Smoothing Cream At Home in Tamil

அடுத்து நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் கான்பிளவர் மாவு. அதாவது சோளமாவு. இதனை 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இது முடியை பார்ப்பதற்கு மிகவும் மென்மையாக வைக்கும். ஆகவே இதனை எடுத்துக்கொண்டு வடிகட்டி வைத்துள்ள அந்த உருளைக்கிழங்கு சாறில் சேர்த்து கலந்துகொள்ளவும்.

அடுத்து இதனை எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும். இதை அப்படியே வைத்தால் கிரீம் போல் மாறிவிடும். அப்போது அடுப்பை அணைத்துவிடவும். இப்போது அதனை அப்படியே கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்

 best permanent hair straightening cream at home

அடுத்து நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் வாழைப்பழம். இதில் நிறைய வைட்டமின் அதுமட்டுமில்லாமல் இதில் இருக்கும் பொட்டாசியம் முடி வளர உதவியாக இருக்கும். ஆகவே உங்கள் முடிக்கு தகுந்தது போல் 3 வாழைப்பழம் எடுத்து மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த பிறகு அதனை அப்படியே நாம் முன்பு சூடமாக மாற்றி வைத்த அந்த கிரீம் கூட இதையும் சேர்த்து  கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

எந்த ஹேர் பேக் போட்டாலும் அதற்கு முன் தலையில் எண்ணெய் வைத்து கொள்ளவும். அதன் பின்பு தலைக்கு இதனை அப்ளை செய்யவும். இதனை வேரிலிருந்து தலை முடியின் நுனி வரைக்கும் அப்ளை செய்யலாம். அதன் பின்பு 20 நிமிடத்திற்கு பிறகு தலையை ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கலாம்.

நீங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement