முடி உதிர்வை தடுக்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்..!

Advertisement

 

ஆரோக்கியமான கூந்தலுக்கு வீட்டு வைத்தியம் 

பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு கற்றாழை:

கற்றாழை
தேங்காய் எண்ணெய்
கருவேப்பிலை
கருஞ்சிரகம்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய்:

ஸ்டேப்:1

முதலில் கற்றாழை நறுக்கி அதில் உள்ள ஜெல்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்:2

மற்றோரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளவும், அதில் கருஞ்சிரகத்தை பொடியாக சேர்த்துக்கொள்ளவும்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய்

ஸ்டேப்:3

பின்னர் கடாயை சூடாக்கி அதில் கருஞ்சிரகம் சேர்த்த தேங்காயை எண்ணெய்யை முதலில் சேர்க்க வேண்டும், பிறகு அதில் பிரித்து வைத்துள்ள கற்றாழை சாற்றை சேர்த்து கொள்ளவும்.

7 நாளில் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் போதும்.

ஸ்டேப்:4

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரண்டியை வைத்து கிண்டிக்கொன்டே இருக்க வேண்டும். கடைசியாக கருவேப்பிலையை சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும்.

ஸ்டேப்:5

எண்ணெய்  நிறம் மாறிய பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆற விட வேண்டும். ஆறியவுடன் வடிகட்டி பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறையும். புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும்.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement