Henna hair pack benefits in tamil
இன்றய காலத்தில் பெரியவர்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் வருகிறதோ இல்லையோ சிரியவயதில் அதுவும் டீன் ஏஜ் வயதில் இருக்குக் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பலவகையான உடல் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது. குறிப்பாக முடி உதிர்வு, இளநரை, வழுக்கை, தலை முடியின் நுனி பகுதில் வெடிப்பு என்று தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் நிறைய வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண ஒரு அருமையான மற்றும் எளிமையான முறையில் செய்யக்கூட ஹேர் பேக் தயார் செய்யலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- மருதாணி பவுடர் – இரண்டு பாக்கெட்
- வெந்தயம் – இரண்டு ஸ்பூன்
- அரிசி – இரண்டு ஸ்பூன்
- டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
- கற்றாழை – 1/2 மடல்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இந்த ஒரு ஸ்ப்ரே போதும்..!
தயார் செய்யும் முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் வெந்தயம், இரண்டு ஸ்பூன் அரிசி, இரண்டு ஸ்பூன் டீத்தூள் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும். அதாவது 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து அதனை வடிகட்டி நன்கு ஆறவைக்கவும், கொதிக்கவைத்த தண்ணீர் நன்கு ஆறியதும் ஒரு பவுலில் மருதாணி பவுடரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் அதில் இந்த தண்ணீரை ஊற்றி கொஞ்சம் கெட்டியான பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள்.
அதன் பிறகு 1/2 மடல் கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்து மிக்சி ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்து கொள்ளுங்கள்.
இந்த கற்றாழை ஜெல்லையும் மருதாணி கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் பேக் தயார்.
பயன்படுத்தும் முறை:
தலை முழுவதும் இந்த ஹேர் பேக்கை நன்கு அப்ளை செய்து இரண்டு மணி நேரம் வரை காத்திருக்கவும் இரண்டு மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு போட்டு சுத்தமாக கழுவவும். இந்த முறையை நீங்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்வது சிறந்து.
பயன்கள்:
இந்த ஹேர் பேக்கை தலைமுடிக்கு பயன்படுத்துவதினால் தலை முடி நன்கு அடர்த்தியாக வளரும், முடி உதிர்வு பிரச்சனை நீங்கும், தலை முடியின் நுனி பகுதியில் ஏற்படும் வெடிப்பு பிரச்சனை நீங்கும், முடி நன்கு போஷாக்குடன் வளரும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாற 2 டீஸ்பூன் கருஞ்சீரகம் போதும்..!
குறிப்பு:
சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்ற கூடாது, ஏன் என்றால் இது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |