Herbal Hair Oil in Tamil
வணக்கம் மக்களே.. இன்றிய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. இந்த முடி உதிவு பிரச்சனைக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது என்று சொல்லலாம். அதாவது ஒழுங்கற்ற பராமரிப்பு, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைப்பது, மன அழுத்தம், தைராயிடு, அதிக பவர் உள்ள மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என்று காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். உடல் சார்ந்த பிரச்சனை சிலவற்றிற்கு இயற்கையான வழிமுறையை பின்பற்றுவது தான் மிகவும் சிறந்தது. அந்த வகையில் இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கும் இறக்கையான முறையை பின் பற்றுவது தான் மிகவும் சிறந்து. அந்த வகையில் இன்று நாம் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க இயற்கையான முறையில் ஹெர்பல் ஹேர் ஆயில் தயார் செய்யும் முறையை பற்றி பதிவு செய்துள்ளோம். உங்களுக்கு வீட்டில் ஹெர்பல் ஹேர் ஆயில் தயார் செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – ஒரு கப்
- மருதாணி – ஒரு கப்
- வேப்பிலை – ஒரு கப்
- செம்பருத்தி இலை – ஒரு கப்
- செம்பருத்தி பூ – ஒரு கப்
- வெள்ளை கரிசிலாங்கண்ணி – ஒரு கப்
- சின்ன வெங்காயம் – அரை கப்
- பெரிய நெல்லிக்காய் – ஆறு
- கருஞ்சீரகம் – 20 கிராம்
- வெந்தயம் – 20 கிராம்
- தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு பூ போதுமா ஆச்சரியமா இருக்கே..!
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய நெல்லிக்காய் இரண்டையும் தனி தனியாக இடது வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு செம்பருத்தி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது எண்ணெய் தயார் செய்ய ஆரம்பிப்போம். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைக்கவும்.
பின் அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு சூடுபடுத்தவதும்.
எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கருவேப்பிலை, மருதாணி, வேப்பிலை, வெள்ளை கரிசிலாங்கண்ணி, செம்பருத்தி இலை மற்றும் பூ இடித்து வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரை எண்ணெயை காய்ச்ச வேண்டும். உதாரணத்திற்கு அவற்றுள் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
எண்ணெய்யில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்கு பொரிந்ததும் கருஞ்சீரகம் மற்றும் வெந்தையம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடம் எண்ணெயை காய்ச்சவும்.
அவ்வளவுதான் ஹெர்பல் ஹேர் ஆயில் தயார். இந்த எண்ணெயை காய்ச்ச குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்படும், இந்த எண்ணெயை காய்ச்சும் போதும் அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.
எண்ணெயை காய்ச்சிய பிறகு இரும்பு கடையிலேயே இரண்டு நாட்கள் வரை ஊறவைக்கவும் இரண்டு நாட்கள் கழித்த பிறகு, எண்ணெயை வடிகட்டி தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வரலாம்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |