Herbal Shampoo Benefits For Hair Fall in Tamil
நண்பர்களே நம்மில் பலரும் வேலைக்கு செல்லும் நபர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு நேரம் இருக்காது. தலைக்கு குளிக்கவேண்டும் என்று அந்த அளவிற்கு வேலையாக இருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு அதாவது நம்மில் அனைவருமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான ஹேர் பேக் போடுவார்கள். அவர்களுக்கு நல்ல முடி வளர்ச்சி இருக்கும்.
ஆனால் சிலருக்கு அப்படி இருக்காது. ஆனால் முடி வளர்ப்பதற்கு ஆசையாக இருக்கும். அவர்கள் முடியை வளர்ப்பதற்கு ஹேர் பேக் போடாமல் இந்த ஷாம்பை மட்டும் அப்ளை செய்தால் போதும். அது என்ன அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Herbal Shampoo Benefits For Hair Fall in Tamil:
சீயக்காய் பொடி – 50 கிராம்
ஆளிவிதை: இந்த ஆளிவிதை முடி வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வெந்தயம்: வெந்தயம் இயற்கையாகவே முடி கொட்டுவதை நிறுத்திவிடும். ஆகேவ இதனை 1 ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும்.
அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்..
செய்முறை:
முதலில் ஒரு பவுலில் சீயக்காய் பொடி 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் ஆளிவிதை 3 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வெந்தயம் 2 ஸ்பூன் அளவு எடுத்து அதில் 200 ML தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
கலந்த பின்பு ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதனை அடுப்பில் வைத்து நாம் கலந்துவைத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்த பின்பு அப்படியே அடுப்பை விட்டு இறக்கிவிடவும். அது ஓரளவு ஆரிய பின்பு வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து அதனை ஒரு பாட்டில் ஊற்றி எடுத்துக் கொள்ளவும். அதனை பிரிட்ஜில் வைத்துவிடவும். அதன் பின்பு உங்களுக்கு தேவை அளவு எடுத்து அதனின் குளிர்ந்த தன்மை மாறிய பின்பு தலைக்கு அப்ளை செய்யவும்.
பயங்கரமா முடி கொட்டுகிறதா கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணுங்க
அப்ளை செய்யும் முறை:
எப்போதும் சரி தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் முன்பு தலைக்கு எண்ணெய் வைத்த பின்பு குளிக்கவும். அதேபோல் இந்த ஷாம்பு பயன்படுத்திய பிறகு எந்த ஷாம்பு பயன்படுத்த கூடாது. அப்படியே யூஸ் பண்ணவேண்டும். இப்படி செய்வதால் முடி மிருதுவாக இருக்கும். அடர்த்தியாகவும் கருமையாக மாறும்.
முடி குச்சி மாதிரி இருக்கா அப்போ இந்த பேக் ட்ரை பண்ணுங்க..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |