Hibiscus Flower for Hair in Tamil
செம்பருத்தி பூவில் சிவப்பு, மஞ்சள் மற்றும் ரோஸ் என பல வகையான வண்ணங்கள் இருப்பது போலவே அதில் பல வகையான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. சாதாரணமாக செம்பருத்தி பூ மற்றும் இலையை அரைத்து பேஸ்ட் போல அரைத்து அதனை அப்ளை செய்து குளிப்பதனால் உடல் சூடு குறையும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த குறிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இவை இல்லாமல் செம்பருத்தி பூவிலும் அதில் உள்ள இலைகளிலும் நமது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய எண்ணற்ற பண்புகள் இருக்கிறது. அதில் ஒரு குறிப்பாக இன்று செம்பருத்தி பூ மற்றும் இலையினை வைத்து எப்படி முடியை அடர்த்தியாகவும், வேகமாகவும் வளர வைப்பது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி வளர செம்பருத்தி பூ:
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ- 3
- அரிசி- 1 கப்
இப்போது 1 கப் அரிசியை நன்றாக தண்ணீரில் 2 முறை வரை கழுவி வைத்து விடுங்கள். அதன் பிறகு மற்றொரு கடாயில் அலசி வைத்துள்ள அரிசி, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை மற்றும் சிறிதளவு தண்ணீர் என இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அடுப்பில் கொதிக்க விடுங்கள்.
கடாயில் உள்ள அரிசி பாதி அளவு வெந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு தயார் செய்து வைத்துள்ள கலவையை வடிகட்டி 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து 1 நாள் முழுவதும் அப்படியே வைத்து கொள்ளுங்கள். முடியின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய பொருள் இப்போது தயார்.
1 தேக்கரண்டி ஊறிய வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க முடி மளமளவென வளரும்
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கலவையை குளிக்க செல்ல போகும் 10 நிமிடத்திற்கு பின்பு நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பின்பு 10 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் 2 முறை ட்ரை செய்தாலே போதும் தலையில் பொடுகு ஏதாவது இருந்தாலும் நீங்கி முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |