செம்பருத்தி பூ எண்ணெய்
பொதுவாக தலைமுடியானது அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முடி உதிர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் மூலம் அவ்வப்போது முடி வளர்ச்சி காணப்பட்டாலும் நாளடைவில் முடி உதிர்வு ஏற்படும். அதனால் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. அந்த வகையில் இன்றைய செம்பருத்தி பூ வைத்து எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூ-10
- வேப்ப இலை- 10
- கருவேப்பிலை- சிறிதளவு
- வெங்காயம்- 3
- வெந்தய விதை- 2 தேக்கரண்டி
- மல்லிகை பூ- 15
- கற்றாழை-1
- தேங்காய் எண்ணெய்- 1லிட்டர்
எண்ணெய் செய்முறை:
முதலில் வெந்தயத்தை 30 நிமிடத்திற்கு ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கற்றாழையில் உள்ள தோலை நீக்கி விட்டு உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும்.
அதன் பிறகு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும், அதில் வெந்தயம் மற்றும் கற்றாழை மற்றும் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இந்த முடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமானு உங்கள கேட்க வைக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!
அதன் பிறகு ஒரு கடாய் வைத்து அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். இதில் அரைத்து வைத்த வெந்தயம் மற்றும் கற்றாழையை சேர்த்து கொள்ளவும்.
இதனை 1 மணி நேரத்திற்கு குறைந்த தீயிலே வைத்து கொதிக்க விட வேண்டும். மேலும் இதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் எண்ணெயில் இறங்கி நிறம் மாற ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.
எண்ணெய் ஆறிய பிறகு வடிகட்டியை பயன்படுத்தி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் வடிக்கட்டி ஓரி கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
எண்ணெயை பயன்படுத்துவது எப்படி.?
இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு நாட்கள் தலை முடி அப்ளை செய்து கொள்ளவும். நன்றாக 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனை இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து தலை குளிக்க வேண்டும்.
உங்களால் இரவு முழுவதும் வைத்திருக்க முடியவில்லை என்றால் ஒரு 30 வைத்திருக்க வேண்டும்.
எண்ணெயை தடவுவதன் நன்மைகள்:
செம்பருத்தி, கருவேப்பிலைம், வெங்காயம் போன்றவை முடியை அடர்த்தியாக வளர்வதற்கு உதவுகிறது.
வேப்ப இலைகள் தலையில் பேன், பொடுகு போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.
கற்றாழையானது முடியை ஷைனிங் ஆக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |