நீண்ட முடி வளர்ச்சி எண்ணெய் | Home Made Hair Oil For Hair Growth in Tamil
நண்பர்களே வணக்கம்..! ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் முடி நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற பேராசை இருக்கும். இப்படி முடி வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களையும் ஷாம்புகளையும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் முடிக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதாவது முடி உதிர்வு, முடி வளர்ச்சியின்மை, நரைமுடி, பொடுகு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் இனி கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தாமல், வீட்டிலேயே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்து தடவுங்கள். சரி வாங்க இந்த பதிவின் வாயிலாக முடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Made Hair Oil For Hair Growth in Tamil:
- தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
- வெந்தயம் – 4 ஸ்பூன்
- கருஞ்சீரகம் – 4 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 6
- நெல்லிக்காய் – 10
- வேப்பிலை – சிறிதளவு
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி இலை – 10
- செம்பருத்தி பூ – 3
- துளசி – சிறிதளவு
- மருதாணி இலை – சிறிதளவு
- அருகம்புல் – சிறிதளவு
அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க |
எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 லிட்டர் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் நாம் மேல்கூறிய பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.
அதாவது வெந்தயம், கருஞ்சீரகம், கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய நெல்லிக்காய், கருவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, துளசி, அருகம்புல் இவை அனைத்தையும் மேல் கூறிய அளவுகளில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா
எண்ணெய் நன்றாக கொதித்து அதன் நிறம் மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல தொடர்ந்து தடவி வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரித்து முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். முடி கட்டுக்கடங்காமல் காடு போல் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |