நீண்ட நாட்களாக தலையில் உள்ள பொடுகு முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்..!

Advertisement

Home Remedies for Dandruff Free Hair in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலையில் உள்ள பொடுகு பிரச்சனை தான். இந்த பொடுகினால் நமது தலைமுடியும் அதிகமாகவே உதிர்கிறது. பொதுவாக பொடுகை அழிக்க முடியாது ஆனால் அதனை உருவாக்கக்கூடிய கிருமிகளை அழிக்க முடியும். அப்படி பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை அளித்து நிரந்தரமாக உங்கள் தலையில் உள்ள பொடுகினை போக்குவது என்பதற்கான எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்:

பொடுகு

உங்கள் தலையில் இருக்கின்ற பொடுகினை நிரந்தரமாக போக்கி முடியை அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரவைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் – 10
  2. கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
  3. பசும் தயிர் – 3 டீஸ்பூன்
  4. வேப்பிலை – 2 கைப்பிடி அளவு
  5. கடுகு எண்ணெய்(Mustard Oil) – 2 டீஸ்பூன்
  6. ஆமணக்கு எண்ணெய் – 2 டீஸ்பூன்
  7. வேப்ப எண்ணெய் – 2 டீஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் 

ஒல்லியாக உள்ள முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர பாட்டி கூறிய ரகசியம்

குறிப்பு செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயம், 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 3 டீஸ்பூன் பசும் தயிர், 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், 2 டீஸ்பூன் வேப்ப எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு இந்த பேக்கினை உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். பிறகு லேசான சூட்டில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து ஒரு மாதம் செய்து வருவதன் மூலமே உங்களின் தலையில் உள்ள பொடுகு நீங்குவதை நீங்களே காணலாம்.

செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்

பாட்டி சொல்றாங்க இந்த ஒரு பேக் தடவுனா முடி எக்கச்சக்கமா வளருமா

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement