1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் போதும் வறண்டு காணப்படும் முகம் சட்டுனு மிருதுவா மாறிவிடும்..!

Advertisement

Home Remedies for Dry Skin on Face in Winter Season in Tamil

நாம் அனைவருக்குமே நமது முகமானது மிகவும் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காணப்படும். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டினால் அது சாத்தியம் ஆகுவது இல்லை. அதிலும் குறிப்பாக இந்த பனிக்காலம் வந்துவிட்டாலே நமது முகம் வறட்சியாகி பொலிவிழந்து காணப்படும். அப்படி வறண்டு பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவு பெற வைப்பதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம்.

ஆனாலும் நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அப்படி உங்களின் முகமும் மிகவும் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பனிக்காலத்தில் வறண்டு காணப்படும் நமது முகத்தை பொலிவு பெற செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம் அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Cure Dry Skin on Face Overnight Home Remedies in Tamil:

வறண்ட முகம் பொலிவு பெற

பனிக்காலத்தில் நமது முகம் மற்ற காலகட்டத்தில் இருப்பதை விட நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு பொலிவு பெற செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளெரிக்காய் – 1
  2. கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன் 
  3. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  4. வைட்டமின் E கேப்சூல் – 2

1 கப் பாசிப்பயறு போதும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் இருந்தயிடம் தெரியாமல் மறைந்துவிடும்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 வெள்ளெரிக்காயை எடுத்து அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள எண்ணெய்யை  மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

நாம் தயாரித்து வைத்துள்ள இந்த பேக்கை இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்களது முகத்தில் தடவி நன்கு மசாஜி செய்து இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். மறுநாள் காலையில் நன்கு வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மட்டும் போதும் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement