இந்த ஒரு பொருள் மட்டும் போதும் முகத்தின் இயற்கை பொலிவிற்கு….

Advertisement

மிருதுவான சருமத்திற்கு   

நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை தான். பளபளப்பான சருமத்திற்கான எண்ணற்ற கிரிம்கள் சந்தையில் உள்ளன. அவை நமது சரும ஆரோக்கியத்திற்கு பொருத்தமானத என்றால் கேள்விக்குறி தான். என்ன தான் விலை உயர்ந்த பல பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் இயற்கை பொருட்களில் கிடைக்கும் சரும பொலிவு அதில் கிடப்பது இல்லை. விலையுயர்ந்த பொருட்களில் ஏற்படும் சரும பொலிவு சில மணி நேரங்களுக்கு மட்டும் தான். ஆனால் இயற்கை பொருட்களில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை எப்போதும் இயற்கையான பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும். அப்படி உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள சில இயற்கை குறிப்புகள் உங்களுக்காக.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

முகம் பளபளப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்:

கற்றாழை கொண்டு வீட்டு வைத்தியம்:

home remedies for glowing skin

Tips 1:

கற்றாழை ஜெல் தலை முடிக்கு மட்டும் உகந்ததாக இல்லாமல் முகத்திற்கும் சிறந்த ஒரு மருந்தாக இருக்கும். கற்றாழை முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி முகம் பளிச்சென்று மாற உதவுகிறது.

ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து இரண்டினையும் நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இதனை உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் இயற்கை பொலிவான முகத்தை பெறலாம்.

Tips 2:

ஒரு கற்றாழையை எடுத்து அதன் தோல்களை சீவி, உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து  முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் எப்போதும் பளிச் என்று இருக்கும்.

Tips 3:

கற்றாழை மற்றும் எலுமிச்சையில் ஆன்டிபாடி மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

இரு பவுலில் எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement