Home Remedies for Grey Hair Turns into Black Fast in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பம் போன்றவற்றினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தலை முடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் நரை முடி பிரச்சனை தான். அதனால் இந்த நரை முடியை மறைக்க மற்றும் போக்க நாமும் கடைகளில் விற்கப்படும் ஹேர் ஆயில், ஹேர் டை போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவோம். இவற்றை எல்லாம் வாங்கி பயன்படுத்துவதால். அந்த சமயத்திற்கு நல்ல பலனை அளிக்கும் ஆனால் நிரந்தரமான தீர்வை தராது. அதனால் இன்றைய பதிவில் உங்கள் வீட்டிலேயே எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நரை முடிக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் தலையில் உள்ள நரைமுடிகளை போக்கி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Permanent Solution for Grey Hair Naturally in Tamil:
பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பார்த்தால் அப்பொழுது வயதானவர்களுக்கு கூட நரைமுடி என்பது இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே நரைமுடி என்பது உள்ளது.
எனவே தான் மிகவும் எளிமையான முறையில் நரைமுடியை போக்க உதவு ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.
- கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய் – 250 மி.லி
- கரிசலாங்கண்ணி கீரை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- வேம்பாளம் பட்டை – 2
- கண்ணாடி பாட்டில் – 1
டக்குனு உங்க நரைமுடி எல்லாம் கருப்பாக மாற வெந்தயம் மட்டும் போதும்
கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை நன்கு சுத்தம் செய்துவிட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
மருதாணி இலையை சேர்க்கவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு மருதாணி இலையை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்
கடாயை எடுத்து கொள்ளவும்:
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 250 மி.லி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகம், கருவேப்பிலை மற்றும் மருதாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கரிசலாங்கண்ணி கீரை பொடியை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு அதனை நாம் எடுத்து வைத்துள்ள கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
இறுதியாக அதில் 2 வேம்பாளம் பட்டையை சேர்த்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலையில் தடவி வருவதால் ஒரே வாரத்தில் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருமையாக மாற ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |