ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வை நிறுத்தி முடி நீளமாக வளர வேண்டுமா..? அப்போ சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க..!

Advertisement

Home Remedies for Hair Fall Control and Regrowth in Tamil

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களின் தலை முடியை நன்கு பராமரித்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்ப நிலை அதிகரிப்பு போன்றவற்றால் தலை முடி அதிக அளவு உதிர்கிறது. அதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் சென்று முடிவதில்லை.

அதனால் தான் இன்றைய பதிவில் உங்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலை முடியை நன்கு நீளமாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Reduce HairFall Naturally in Tamil:

How to Reduce HairFall Naturally in Tamil

இயற்கையான முறையில் உங்கள் தலை முடி உதிர்வை நிறுத்தி தலை முடியை அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை இங்கு காணலாம். அதற்கு தேவையான பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 250 கிராம்
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  3. தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர் 
  4. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  6. ஆமணக்கு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

ஏப்புரா அப்படின்னு நீங்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு உங்களின் தலைமுடி வளர வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 250 கிராம் சின்ன வெங்காயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள்.

கடாயை எடுத்து கொள்ளவும்: 

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள பசை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

உங்கள பாத்து மத்தவங்க எப்படிங்க இவ்ளோ முடியை வளர்த்தீங்கனு கேட்கிற அளவுக்கு தலைமுடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

கருஞ்சீரகத்தை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை இரவு தூங்க செல்வதற்கு முன் தலையில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.

மறு நாள் காலையில் தலைக்கு குளியுங்கள். இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வு ஒரு வாரத்தில் கட்டுக்குள் வருவதை நீங்களே காணலாம்.

உங்க உதடுகள் கோவைப்பழம் போல் சிவப்பாக மாற பாதாம் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement