நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு
பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான ஆரோக்கியமான கூந்தலை தான் விரும்புகின்றனர். ஆனால், அதை பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான காரியமாக உள்ளது. நம்மை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் நமது ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்கள் என அனைத்தையும் யன்படுத்துகின்றோம். இதை தவிர, பல பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளித்து கூந்தலின் வளர்ச்சியை தூண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகளை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
-
வெங்காய சாறு:
உங்கள் முடியினை நீளமாக வளர்க்க நினைத்தால் உங்களுக்கு வெங்காய சாறு சிறந்த தீர்வாக இருக்கும்.
வெங்காயத்தில் உள்ள கந்தகம் உங்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
செய்முறை:
1/4 கப் வெங்காய சாறை எடுத்து அதில் அரை எலும்பிச்சை பழச்சாற்றினை சேர்த்து உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் அனைத்து பகுதிகளிலும் குறைந்தது 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்வதால் உங்களின் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
2. முட்டை வெள்ளை கரு:
முட்டையில் உள்ள மாஸ்க் புரதம் உங்களின் ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கும்.
இந்த மாஸ்க் புரதம் உங்கள் முடி நீளமாக வளர உதவுகிறது.
செய்முறை :
2 முட்டைகளை உடைத்து, அதில் உள்ள வெள்ளைக்கருக்களை மட்டும் தனியாக வடிகட்டி அதனுடன் கற்றாழை சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து உங்கள் தலையில் 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சீயக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
அதோடு உடைந்த முடிகள் ஆரோக்கியமாக வளரும்.
நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |