Mudi Adarthiyaga Valara Tips in Tamil
மனிதனாக பிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் செலவுகள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சிலர் செய்யும் செலவோடு சேர்த்து முடி மற்றும் முகத்திற்கு என்று சில பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் என்ன தான் நாம் செலவு செய்து பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தாலும் கூட அதில் நாம் நினைத்த மாதிரியான பலன்களை பெற முடியாது. இத்தகைய நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருந்தால் ஒரு சில கட்டத்திற்கு மேல் கவலைகள் அதிகரிக்கக்கூடும். அதனால் இன்று முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர செலவே இல்லாமல் பாட்டி சொன்ன ரகசியத்த்தை ட்ரை செய்து பயன்பெறலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்:
செம்பருத்தி இலை மற்றும் பூவானது முடியின் வளர்ச்சியினை நன்றாக ஊக்குவிக்கவும் மற்றும் கருப்பாக வளரவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அதனால் இன்று செம்பருத்தி ஹேர் பேக் செய்து அப்ளை செய்யலாம் வாங்க..!
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ- 5
நீங்கள் எப்போதும் ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முதல் நாள் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள்.
பெண்களே முகத்தில் இருக்கும் முடி நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா
பின்பு மறுநாள் காலையில் ஊறவைத்துள்ள வெந்தயத்தை பேஸ்ட் போல நன்றாக அரைத்து தனியாக வைத்து விடுங்கள். இதனை தொடர்ந்து அதே மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ மற்றும் இலையினை சேர்த்து அதனுடன் தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.
இப்போது அரைத்த செம்பருத்தி பேஸ்ட்டினை அரைத்து வைத்துள்ள வெந்தய பேஸ்டுடன் கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்து குறைந்தது 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு வாரம் 1 முறை செய்து வாருங்கள் உங்களின் தலை முடியில் நல்ல வளர்ச்சி காணப்படும்.
இந்த பேஸ்ட் தலை முடி வளர்ச்சியினை சரி செய்வதோடு மட்டும் இல்லாமல் உடலில் காணப்படும் சூட்டினை குறைத்து நரை முடி வராமல் தடுத்து முடியை கருப்பாக வளரவும் செய்கிறது.
இந்த எண்ணெயை தடவுனா இப்படியா முடி வளரும் இத்தனை நாள் சொல்லாம விட்டுட்டியே பாட்டி
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |