உங்களின் அழகை கெடுக்கும் முகப்பருக்கள் நீங்கி சருமம் பொழிவு பெற…

 முகப்பருக்கள் அற்ற சருமத்திற்கு 

பெரும்பாலானோர், தனது முகம் வெள்ளையாகவும் முகப்பருக்கள் அற்று அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் முகமோ அதற்கு மாறாக இருக்கும். இருந்தாலும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பல வழிகளை கடைப்பிடித்து கொண்டு தான் இருப்போம். ஒரு சிலர் முகத்தில் உள்ள பருக்கள் மறைய பல விலை உயர்ந்த பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் அவை எல்லாம் ஒரு சில நாட்கள் தான் பலனளிக்கும். சில கிரீம் சருமத்தையும் பாதிக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இயற்கை பொருட்கள். எனவே எப்போதும் நமக்கு பலனளிப்பது இயற்கை பொருட்கள் தான். எனவே இப்பதிவில் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி முகத்தை பருக்கள் அல்லாமல் வெண்மையாக வைத்து கொள்வது  என்பதை இப்பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேன் மற்றும் எலுமிச்சை:

கரும்புள்ளி மற்றும் முகப்பருக்கள் நீங்கி

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது.

தேன் சருமத்திற்கு ஊட்டச்சத்து வழங்குகிறது. அதுமட்டும் அல்லாமல் தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளதால், சருமத்தின் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் சருமத்தில் உண்டாகும் பருக்களை குறைக்கலாம்.

முகப்பருவில் இருந்து முகத்தை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்:

 முகப்பருக்கள் அற்ற சருமத்திற்கு 

 

தேவையான பொருட்கள்:

  • தேன்
  • எலுமிச்சை

தயாரிப்பு முறை:

ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேன் எடுத்து அதில் அரை எலுமிச்சை பழத்தின்  பிழியவும்
இதை நன்கு கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தும் முன்னர் முகத்தினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.

இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில்  உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருக்கள் நீங்கி முகம் பளிச் என்ற  தோற்றத்தை தரும். பளிச்யென்ற 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்