கருவளையம் நீங்க வீட்டு வைத்தியம்
கருவளையம் உடனே நீங்க / kan karuvalayam poga tips: பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். Dark circles என்று செல்லக்கூடிய கருவளையம் பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஒவ்வாமை, மரபணு அல்லது முதுமை காரணமாக ஏற்படலாம். இந்த கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். கருவளையத்தை சரிசெய்ய நாம் உட்கொள்ளும் உணவு முதல் நமது அன்றாட செயல்களை சரியான திட்டமிடலோடு செய்து, சரியான நேரத்தில் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும். கருவளையம் உங்கள் முகப்பொழிவை குறைப்பதாக நீங்கள் உணர்தல் நாம் முன்னோர்கள் கூறிய சில குறிப்புகள் மூலம் சரிசெய்யலாம். வாருங்கள் அந்த குறிப்பு என்ன என்று பார்ப்போம்.
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காய்:
கண்களுக்கு குளிர்ச்சிதரும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க வெள்ளேரி மற்றும் உருளை கிழங்கு சிறந்தது.
இந்த காய்களில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகியவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை குறைப்பது மட்டும் அல்லாமல் கண்களை சுற்றியுள்ள கருமையை சிறிதுசிறிதாக குறைக்கும்.
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்துவது:
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை அரைத்து, அந்த கலவையை உங்கள் கண்களை சுற்றி நீங்கள் தடவிக்கொள்ளலாம். 15 நிமிடத்திற்கு பிறகு மிதமான தண்ணீரால் உங்கள் முகத்தை கழுவவேண்டும்.
அல்லது உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிகாய்களை அரைத்து அந்த சாற்றை பிழிந்து அந்த சாற்றை ஒரு காட்டன் துணியில் நனைத்து அதனை உங்கள் கண்ணை சுற்றி வைக்கவும்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சைச் சாற்றில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் இருப்பதால் அந்த அமிலம் உங்கள் கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தை குறைக்கும் ஆற்றல்கொண்டது. எலுமிச்சைச் சாற்பயன்படுத்தும் போது அதிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு எப்படி பயன்படுத்துவது:
ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறு துளி எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ள வேண்டும்.
இந்த கலவையை உங்கள் கண் பகுதியில் மெதுவாக 2 முதல் 3 நிமிடங்கள் வரை தொடர்ந்து 2 வாரங்கள் மசாஜ் செய்து வருவதன் மூலம் உங்கள் கருவளையத்தை குறைக்கலாம்.
கை கால் முட்டிகளில் உள்ள கருமை நீங்கி வெண்ணிற தோற்றத்தை பெற ஒரு வாரம் போதும்…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |