கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

Advertisement

Sunken Eyes Home Remedies in Tamil

ஒரு சிலருக்கு கண்ணிற்கு கீழே குழி விழுந்ததுபோல் ஒரு கருமை நிறத்தில் கோடு போன்று இருக்கும். இது பல காரணங்களால் எற்படுகிறது. இருப்பினும் மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான உணவு முறைகள் போன்றவற்றால் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க சிலர் பலவிதமான வழிகளை மேற்கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்று இருப்பார்கள். எனவே, குழி விழுந்த கண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய இயற்கையான வழிகள் பல உள்ளன. அதில் சிலவற்றை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies For Sunken Hollow Eyes in Tamil:

Home Remedies For Sunken Hollow Eyes in Tamil

உருளைக்கிழங்கு சாறு:

கண்ணிற்கு கிழே உள்ள கருமை நிற குழியை நீக்க உருளைக்கிழங்கு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 kan kuzhi neenga

உருளைக்கிழங்கீழ் உள்ள சாற்றினை மட்டும் எடுத்து கண்களின் கீழ் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள் .

அதன் பிறகு, தண்ணீரை கொண்டு கழுவி துடைத்து விடுங்கள்.

இதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கண்ணிற்கு கிழே உள்ள கருமை நிற குழி மறைய தொடங்கும்.

கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.!

சந்தனம்:

சந்தனத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை கண்களின் கீழ் பகுதியில் அப்ளை செய்து உலர்ந்ததும் கழுவி வருவதன் மூலம் கண்ணிற்கு கிழே உள்ள கருமை குழி நீங்கும்.

க்ரீன் டீ:

பயன்படுத்திய இரண்டு க்ரீன் டீ பேக்குகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து எடுத்து கொள்ளுங்கள்.

இதனை, கண்களின் குழி பகுதியில் 15 நிமிடம் வரை வைக்க வேண்டும்.

 how to get rid of sunken eyes permanently in tamil

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், கண்களின் கிழே உள்ள குழி படிப்படியாக குறைவதை காணலாம்.

பாதாம் எண்ணெய்:

தினமும் இரவு தூங்குவதற்கு முன், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெயை குழி உள்ள பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து வருவதன் மூலம் கண்களின் கீழே உள்ள குழி மறைய தொடங்கும்.

சன்ஸ்கிரீன் லோஷன்:

 how to treat sunken hollow eyes in tamil

கண்களுக்கு கிழே உள்ள தோல் பகுதி மிகவும் மென்மையானது. எனவே இப்பகுதியில் சேதம் ஏற்படாமல் இருக்க நல்ல தரமான சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும்.

5 நாட்களில் மருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைய பூண்டு மட்டும் போதும்..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement